Latest Posts
Jul 14, 2017
பணமதிப்பு நீக்க நடவடிக்கை துவங்கிய 8 மாதங்களுக்குப் பிறகும் செல்லாத நோட்டுகள் எண்ணும் பணி தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது தெரிந்ததே. இத்தகவல் சமூக வலைத்தளங்களிலும் மக்களிடையேயும் பலவிதமாக சரமாரியாக கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதுகுறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ரிசர்வ் வங்கிக்கு மட்டுமின்றி, பிரதமர் அலுவலகத்துக்கும் கணக்கு ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டரில், “பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து ஆர்பிஐ நோட்டு எண்ணும் இயந்திரம் வாங்கியுள்ளது, குத்தகை என்று ஒன்று இருப்பது ஆர்பிஐ-க்கு தெரியுமா” என்று பதிவிட்டுள்ளார்.
Read More →Jul 14, 2017
சென்னை தேனாம்பேட்டை போலிஸ் ஸ்டேஷன் மீது நேற்று அதிகாலை 4.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். காவல்நிலைய பெயர்ப்பலகையின் மீது பட்டு, நுழைவாயிலில் விழுந்த குண்டு, அங்கேயே தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார், தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
போலிஸ் ஸ்டேஷன் அருகில் அரசியல் கட்சி பேனர் கட்டிக் கொண்டிருந்தவர்கள் கூறிய பிறகே, உள்ளே இருந்த காவலர்களுக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்த போலிசார், கட்டுப்பாட்டு அறைக்கும் ரோந்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Read More →Jul 14, 2017
காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நாடான சீனாவின் மத்தியஸ்தத்தை ஏற்க முடியாது என்று இந்தியா நிராகரித்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, இதற்கு பதில் அளித்துப் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தை ஏற்க முடியாது என்றும், அது இருநாடுகள் இடையிலான பிரச்னை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் காஷ்மீர் விவகாரம் என்பது அந்த மாநில மக்கள் சம்பந்தப்பட்டது என்றும், இதில் எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
Read More →Jul 13, 2017
நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட சூரியப்புள்ளியை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் பரப்பளவு பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த பகுதி சுழன்று வருவதுடன் விரைவாக வளர்ந்து வருகிறது என நாசா ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது. சூரியனில் காணப்படும் கருப்புப்புள்ளிகள் பொதுவாக சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும். தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பகுதியிலிருந்து பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகள் எழலாம் என கருதப்படுகிறது. இப்பகுதியிலிருந்து சோலார் ஃப்ளேர் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சோலார் ஃப்ளேர் ஏற்படும்போது இந்த பகுதிகள் மிகப் பிரகாசமாக காணப்படும்.
Read More →Jul 13, 2017
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சிறைத்துறை அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.
கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக பதவியேற்ற டி.ஐ.ஜி. ரூபா பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார். ரூபா அளித்து உள்ள அறிக்கையில், சோதனையின் போது சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More →Jul 13, 2017
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக சர்ச்சையில் சிக்கியிருக்கும் நடிகை காயத்ரி ரகுராம், நடிகை ஓவியாவை திட்டும் போது ‘சேரி பிகேவியர்’ என்று கூறியதால், சேரிமக்களை இழிவுபடுத்தியுள்ளார் என கூறப்பட்டது. சேரி என்ற வார்த்தையை கூறியதால் பொதுமக்களின் அதிக எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார்.
ஆனால், எனது மகளை தவிர அந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் நடிக்கின்றனர் என காயத்ரியின் தாய் கிரிஜா கூறியுள்ளார். சேரி தொடர்பாக காயத்ரி ரகுராம் பேசிய வார்த்தைகள் மக்களை பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். காயத்ரி ரகுராமை கேவலபடுத்த வேண்டாம் என கேட்டுகொண்டார்.
Read More →Jul 13, 2017
நடிகர் கலாபவன் மணி மரணத்தில் நடிகர் திலீபுக்கு தொடர்பு இருப்பதாக பிரபல இயக்குனர் பைஜூ இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார்.
நடிகை பாவனா கடத்தல் விவகாரம் தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டு உள்ளார். இந்நிலையில் மலையாள திரைப்பட இயக்குநர் பைஜூ வெளியிட்ட அறிக்கையில், நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு திலீப் தான் காரணம் என்றும், அதற்கு முறையான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொச்சி மாவட்டத்தில் கொட்டாரகரையில் அமைந்துள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குநர் பைஜூவும் இன்று புகார் அளித்தார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read More →Jul 13, 2017
அண்டார்டிகாவில் டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை தனியாக பிளந்து மிதக்கிறது. இதனால் கடல் மட்டம் சற்று உயரலாம் என்று கருதப்படுகிறது.
இப்பனிப்பாறையை பலகாலமாக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்து வந்தனர். பின்னர், ஜூலை 10 ஆம் தேதிலியிருந்து 12 தேதிக்குள் பிரிந்து விட்டதை விஞ்ஞானிகள் அறிந்தனர். இப்பனிப்பாறையின் சுற்றளவு 5,800 சதுர கிலோமீட்டர்களாகும். இதற்கு ஏ 68 என்று பெயரிட்டுள்ளனர்.
இதுவரை பிரிந்து வந்த மிகப்பெரிய பனிப்பாறைகளில் மிகப் பெரியது இதுவாகும். இதன் போக்கு எப்படியிருக்கும் என்பதும் இதுவரை தெரியவில்லை. பனிப்பாறை பிரிந்து விட்டதால் லார்சின் சி எனும் பனி அடுக்கில் 12 சதவீத பரப்பு குறைந்திருக்கிறது.
Read More →Jul 13, 2017
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து படிப்பதற்கு, நாட்டின் புதிய குடியேற்ற கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக புதிய நிபந்தனை ஒன்றை விதிக்க டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
தற்போது அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவ-மாணவிகள் தாங்கள் அமெரிக்க கல்வித் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு பதிவு செய்தது முதல் அந்த படிப்பை முடிக்கும் காலம் வரை ஒரு முறை விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது. இவர்களுக்கு தங்கியிருந்து படிக்கும் காலம் வரை எப்-1 விசா வழங்கப்படுகிறது.
புதிய விதிமுறையின்படி அமெரிக்காவில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் பல் கலைக்கழங்களில் படிப்பை மேற்கொள்ள பதிவு செய்த நாளில் இருந்து அங்கு தங்கி படிக்கும் காலம் வரை ஆண்டுதோறும் தங்களுடைய படிப்புக்கான பதிவை மறு விண்ணப்பம் செய்து புதுப்பிக்கவேண்டும்.
Read More →Jul 13, 2017
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் அரிய நாணயங்களை பாதுகாத்து வரும் போட் மியூசியம் என்ற அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 5,40,000 நாணயங்கள் உள்ளன. ஜெர்மனியின் மதிப்புமிக்க அருங்காட்சியகங்களில் ஒன்றான இதற்கு குண்டுதுளைக்காத கண்ணாடியால் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இங்கு 100 கிலோ எடையில், 53 செ.மீ. விட்டம் 3 செ.மீ. தடிமன் அளவில் சுத்த தங்கத்தால் ஆன கனடா நாட்டு நாணயம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வந்தது. 2-ம் எலிசெபத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த நாணயம் தூய்மையான தரத்துக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது. இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.26 கோடி) என மதிப்பிடப்பட்டு உள்ளது.
Read More →