Latest Posts

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி

Jul 18, 2017

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த எந்த விசாரணையையும் சந்திக்க தான் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று, பின்னர் டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. அதிமுகவின் ஒரு கோஷ்டியான, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. அதோடு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Read More →

அமெரிக்கா: H - 2B விசா அனுமதி எண்ணிக்‍கை மேலும் 15 ஆயிரம் உயர்த்தப்பட்டது

Jul 18, 2017

இந்த நிதியாண்டின் எஞ்சிய காலத்திற்கான, குறைந்த ஊதியங்கள் மற்றும் குறுகிய காலப் பணிகளுக்‍கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்‍கு வழங்கப்படும் H-2B விசாக்‍களின் எண்ணிக்‍கையை மேலும் 15 ஆயிரமாக அதிகரித்து அமெரிக்‍க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடல் உணவு, சுற்றுலா மற்றும் பிற தொழில்துறைகளில் இந்த விசாவின் கீழ் பணியாற்ற முடியும். அமெரிக்‍காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்திய தகவல் தொழில் நுட்ப பணியாளர்கள் அதிகமாக பயன்படுத்தும் H1B விசாவைக் குறித்து புதிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த காலக்கட்டத்தில் வழக்‍கமாக H-2B விசாக்‍களின் எண்ணிக்‍கையைவிட 45 சதவீதம் அதிகம் என்று அமெரிக்‍க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்‍கான அதிகாரிகள், நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Read More →

நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் : மு.க.ஸ்டாலின்

Jul 18, 2017

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதல் பெறாமல் உள்ளதை பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சுட்டிக்காட்டினார்.இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், இதற்குப் பொறுப்பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக் குறித்து தொடர்ந்து சட்டசபையில் பேச திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Read More →

கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பூர்வமாக தனிக்கொடி அமைக்க ஆய்வுக்குழு நியமனம்

Jul 18, 2017

கர்நாடக மாநிலத்திற்கென சட்டப்பூர்வமாக தனிக்கொடி அமைக்க ஆய்வுக்குழு அங்கு ஆழும் காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்மையில் கர்நாடகாவில் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிற்கென தனிக்கொடி அமைக்க வேண்டும் என கன்னட அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுடன் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 வின்படி ஜம்மு காஷ்மீர் மட்டும் மாநிலத்திற்கு என தனியாக கொடியை கொண்டிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் தனிக்கொடியை கொண்டுவர முனைப்பு காட்டி உள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Read More →

11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த விநோத சமிக்ஞை

Jul 18, 2017

சமீபத்தில் விண்வெளி ஆய்வாளர்கள் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்த ஒரு சிக்னலை ஆய்வு செய்து வருகின்றனர். ராஸ் 128 என்று அழைக்கப்படும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தில் இருந்து இந்த சிக்னல் கிடைத்து உள்ளது . இது சூரியனை விட 2,800 மடங்கு மங்கலானது ஆகும். அதை சுற்றி வேறு எந்த கிரகம் உள்ளது என தெரியவில்லை. இந்த “விசித்திரமான” ரேடியோ சிக்னல்களை, மே மாதத்தில் புயூர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழகத்தில் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அரிசிபோ நட்சத்திர ஆய்வகத்தினை (Arecibo Observatory) பயன்படுத்தி இந்த சிக்னல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்சர்வேட்டரி பியூர்டோ ரிக்கோவிலுள்ள ஒரு தொட்டியின் உள்ளே கட்டப்பட்ட பெரிய வானொலி தொலைநோக்கியினால் ஆனது.

Read More →

நலம்தரும் மூலிகைகள் : 3 - ஜிங்கோ, ஜின்செங் & இஞ்சி

Jul 18, 2017

ஜிங்கோ இது சீனாவில் வளரும் ஒரு மரத்தின் இலைகளிலிருந்து வருகிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கவும், உடலின் இரத்த சுழற்சியை மேம்படுத்தவும் இது உதவுகிறது. ஜிங்கோ பிலோபா (Ginkgo biloba) – விலிருந்து எடுக்கப்படும் சாற்றில் ஃப்ளேவனாய்டு மற்றும் டெர்பனாய்டு ஆகியன எதிர்-ஆக்ஸிடன்ட் (antioxidant) குணங்கள் கொண்டுள்ளன. இதன் காரணமாக, ஜிங்கோவினால் ஞாபகசக்தி அதிகரிக்கக்கூடும். இதற்கு இரத்தத்தைச் சன்னமாக்கும் (Blood thinner) பண்பும் உண்டு. ஆயினும், ஜிங்கோவினால் எப்போதாவது மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம். ஜின்செங் ஜின்ஸெங் உலகிலேயே மிகவும் பிரபலமான மூலிகை மருந்துகளில் ஒன்றாகும். இது நூற்றாண்டுகளாக ஆசியா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூர்வீக அமெரிக்கர்கள் இதனை செயல் ஊக்கியாகவும், தலைவலி நிவாரணியாகவும் பயன்படுத்தினர்.

Read More →

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு

Jul 17, 2017

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்காக சென்னையில் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், எதிர்க் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தார். 6 வது நபராக வந்து அவர் தன் வாக்கை பதிவு செய்தார். ஒட்டுச்சாவடி அறைக்குள் அ.

Read More →

உயர்ந்த மனிதன்

Jul 17, 2017

A man is great by deeds, not by birth. – Chanakya “ஒரு மனிதன் தன் செயல்களினாலேயே உயர்ந்தவனாவான், உயர்குடிப் பிறப்பினால் அல்ல” – சாணக்கியர்

Read More →

மாரத்தான் போட்டியில் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

Jul 17, 2017

போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளின் கல்வி உதவிக்காக தேசிய தடகள அமைப்பும், புனேவில் உள்ள ‘ஷர்ஹாத்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் நேற்று மாரத்தான் போட்டியை நடத்தின. இதில் 21.1 கி.மீ. தூரத்துக்கான பிரிவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பல்வேறு சமுதாய பிரச்சினைகளுக்காக நடத்தப்பட்டு வரும் மாரத்தான் போட்டிகளில், இளைஞர்களிடம் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடி வருகிறார்.

Read More →

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டார்

Jul 17, 2017

பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டார். பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டதை, கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்துடன் வரவேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாணவர் பருவத்தில் இருந்தே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் வெங்கையா நாயுடு, மிகுந்த அனுபவம் கொண்டவர் என்றும் அமித்ஷா தெரிவித்தார். 68 வயதான வெங்கையா நாயுடு, தற்போது, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »