Latest Posts

கொசுக்களை அழிக்க கூகுளின் புதுத் திட்டம்

Jul 20, 2017

வெரிலி நிறுவனம் பாக்டீரியா தொற்றிய ஆண் கொசுக்களை கலிஃபோர்னியாவிலுள்ள ஃப்ரெஷ்னோவில் வெளியே அனுப்பியுள்ளது. இது மஞ்சள் காய்ச்சல் கொசுக்களை (Aedes aegypti) ஃப்ரெஷ்னோ விலிருந்து அழிப்பதற்கான முதல் முயற்சி. இக்கொசுக்களால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிக்கா வைரஸ் ஆகியவை பரவுகிறது. கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபாபேட்ஸ் லைஃப் சயின்ஸ் (வெரிலி), தனது உயிர் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வகத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு மில்லியன் கொசுக்களை உருவாக்க உள்ளது. உலகில் உள்ள பல நோய்களுக்கு முக்கிய காரணம் கொசு. அளவில் சிறிதாக இருந்தாலும் நோய்களை பரப்புவதில் கொசுவுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த மாபெரும் அந்நிய சக்தியான கொசுவை உயிர் அறிவியல் தொழில் நுட்பவியல் மூலம் அழிக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது.

Read More →

தனிநபரின் அந்தரங்கத்திற்கான உரிமை முழுமையானதாக இருக்க முடியாது, கட்டுப்படுத்தப்படலாம் : உச்ச நீதி மன்றம்

Jul 20, 2017

தனிநபரின் அந்தரங்கத்திற்கான உரிமை முழுமையானதாக இருக்க முடியாது, கட்டுப்படுத்தப்படலாம் என்று விசாரணையின் போது உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு விசாரி த்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களிடம் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை எழுப்பியுள்ளது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியன், சோலி சொராப்ஜி, ஷியாம் திவான் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். கோபால் சுப்ரமணியம் வாதிடும்போது, குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துடன் அந்தரங்கத்துக்கும் தொடர்பு உள்ளது என்றார்.

Read More →

இந்திய ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் முன்னிலை

Jul 20, 2017

இந்திய ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருகிறார். இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. இதில், மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ராம்நாத் கோவிந்த் 4,79,585 வாக்குகளையும் , மீரா குமார் 2,045,94 வக்குக்களையும் பெற்றுள்ளனர்.

Read More →

நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராஜ்நாத்சிங்கிடம் மனு

Jul 20, 2017

நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோரி டாக்டர். அன்புமணி ராமதாஸ் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மனு அளித்தார். பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு மசோதா 6 நாட்களில் சட்டமாக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு தொடர்பான மசோதா 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை மந்திரி கூறினார். இது தொடர்பாக பேச பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் நேரம் கோரி இருக்கிறேன். நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டத்துக்கு ஒப்புதல், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் தான் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பதிவு செய்வோம் என்று தமிழக அரசு கூறியிருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

Read More →

இந்தி திணிப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் நான் என்றோ அரசியலுக்கு வந்து விட்டேன்: கமல்ஹாசன்

Jul 20, 2017

நேற்று கவிதை மூலம் மறைமுகமாக அரசியலில் வரப்போவதாக தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், இன்று ட்விட்டரில் தனது முதலாவது அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கில் ரீட்வீட் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், முன்பு தன்னைத் தாக்கிப் பேசிய அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்துள்ளார். கிண்டல் பெயர்  யாரைக் குறிக்கிறது  ஏன் தம்பி அமைச்சர் ஜெயக்குமார் ஜெயக்குமார் கமலை அரசியலுக்கு முடிந்தால் வந்து பார் என்றார். ஆகவே, உன்னைவிட எனக்கு அரசியல் அனுபவம் அதிகம் என்பதற்காக “தம்பி”யானார் ஜெயக்குமார் எலும்பு வல்லுனர் எச். ராஜா கமலை எச்.ராஜா முதுகெலும்பில்லாதவர் என்று சொன்னதால், “எச்.

Read More →

சீனாவினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம்: முலாயம் சிங் யாதவ்

Jul 19, 2017

இந்தியாவுக்கு சீனாவினால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என மக்களவையில் முலாயம் சிங் யாதவ் பேசிஉள்ளார். சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாமில் பகுதியில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை இந்திய ராணுவம் தடுத்து உள்ளது. இதனையடுத்து இந்தியாவை எச்சரிக்கும் விதமாக பல அறிக்கைகளை வெளியிட்டு வரும் சீனா, எல்லையில் படைகளையும் அதிகரித்து உள்ளது. பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறி உள்ள இந்தியா படையை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது. இதனால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்து உள்ளது. இதுகுறித்து பாராளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பிய சமாஜ்வாடி எம்.பி. முலாயம் சிங் யாதவ், அண்டைய நாட்டிடம் இருந்து எழுந்து உள்ள அச்சுறுத்தலை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறிஉள்ளார்.

Read More →

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மத்திய அரசுக்கு முன்பே தெரியும் ?

Jul 19, 2017

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம், பணப் பரிமாற்றத்தின் மூலம் மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று தெரியவந்துள்ளது. அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்று, ஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது அம்பலமாகி உள்ளது. 5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அனுபவித்து வந்ததை டி.ஐ.ஜி. ரூபா ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார். சசிகலா தரப்பிலிருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது கடந்த ஏப்ரல் மாதமே மத்திய அரசுக்கு தெரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

Read More →

முடிவெடுத்தால் யாம் முதல்வர்…விரைவில் ஒரு விளி கேட்கும் : கமல்ஹாசன்

Jul 19, 2017

தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேசினர். ஆயினும், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாயின. தன் மீது வசை பாடியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில் இன்று சில கருத்துக்களை கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். மேலுமொரு ட்வீட்டில் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

Read More →

ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா ? இன்று ஆதார் வழக்கு விசாரணை

Jul 19, 2017

    ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர். அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு நியமம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆதார் அட்டைக்காகச் சேகரிக்கப்படும் கைரேகைப் பதிவு, விழித்திரை ஸ்கேன் போன்றவை தனி நபரின் அந்தரங்கத்தில் அரசின் தலையீடாகும் என சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்து உள்ளனர். அவற்றுள், வினய் விஸ்மான் மற்றும் மத்திய அரசு உள்ளிட்ட பல தரப்பினரின் வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.

Read More →

துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது - அரசியல் தலைவர்கள் கண்டனம்

Jul 18, 2017

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டு என கூறி சேலத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இதழியல் மாணவி வளர்மதி என்பவரை போலீசார் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர். இவர் இயற்கை பாதுகாப்பு குழு என்ற அமைப்பை சேர்ந்தவர். அவர் மீது தற்போது சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டம் போடப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்‌ கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »