Latest Posts

நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு

Jul 26, 2017

சுப்ரீம் கோர்ட்டினால் 6 மாத தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டனையை அனுபவித்து வரும் நீதிபதி கர்ணன், தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு செய்துள்ளார். தமிழகத்தைச் சார்ந்தவரும், கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன் தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், தான் பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார். உச்சநீதிமன்ற ஆணையின்படி சென்ற ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அவர்களின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார்.

Read More →

இந்தியாவின் 14 - ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

Jul 26, 2017

இந்தியாவின் 13-வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவுற்றதை அடுத்து, இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக திரு. ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார். சரியாக நண்பகல் 12 மணி 7 நிமிடங்களுக்கு தேசிய கீதத்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரும், பிரணாப் முகர்ஜியும் மேடையில் இருக்கை மாறி அமர்ந்தனர். பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழுமியிருந்தனர்.

Read More →

யானை புக்க புலம்

Jul 26, 2017

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம் போல, தானும் உண்ணான், உலகமும் கெடுமே. பாடியவர்: பிசிராந்தையார் – புறநானூறு # 184 உரை : மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், அதனை யானை பல நாட்களாக உண்ணும்.

Read More →

நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தரத் தீர்வே தேவை : மு.க.ஸ்டாலின்

Jul 25, 2017

நீட் தேர்விலிருந்து இந்த ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசிடம் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அதிமுக அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கே தமிழகத்திற்குத் தேவை என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் மாணவர் சமூகம் ‘நீட்’ எனும் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருவதை தாமதமாக உணர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது கடைசிநேரத்தில் விழித்துக்கொண்டு, எதையாவது செய்து நெருக்கடியில் இருந்து மீள்வற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

Read More →

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி கைது : மாணவர்களைப் பழிவாங்க அரசு தீவிரம்

Jul 25, 2017

அரசுக்கு எதிராக போராடிய மாணவர்களான திருமுருகன் காந்தி மற்றும் வளர்மதி ஆகியாரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளியதைத் தொடர்ந்து, தற்போது ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதியைக் கைது செய்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக இப்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி கைதுசெய்யப்பட்ட திவ்ய பாரதி தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திவ்ய பாரதி அளித்த பேட்டியில், “தலித் மாணவர்களின் விடுதியில் சரியாக வசதிகள் செய்து தரபடவில்லை என்று நான் போராடி இருந்தேன் . மன்னர் கல்லூரியை சேர்ந்த சுரேஸ் என்ற மாணவர் பாம்பு கடித்து தனது அறையில் இறந்தார் . இந்த நிலையில்தான் தலித் விடுதிகளின் நிலைமை இருக்கிறது.

Read More →

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை உறுதிபடத் தெரியவில்லை: ஈராக் அமைச்சர்

Jul 25, 2017

ஈராக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை என்னவென்று உறுதிபடத் தெரியவில்லை என்றும் இன்னமும் அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்தியப் பாராளுமன்றத்தில் அகாலிதளம் உள்ளிட்ட கட்சியினர் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தனர். தற்போது இந்தியா வந்துள்ள, ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் ஜபாரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களை இன்று சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடையே பேசும் போது, “கடத்தப்பட்ட 39 பேரும் கடைசியாக பதூஷ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More →

திரைப்படத்துறை மீதான கேளிக்கை வரி : பேச்சுவார்த்தை தோல்வி

Jul 24, 2017

திரைத்துறை மீதும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கேளிக்கை வரி 30 சதவீதம் சேர்த்து வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.   இதுதொடர்பாக, முதல்வர், அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாதநிலையில், இன்று மூன்றாம் கட்ட இறுதிப் பேச்சு வார்த்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், தொழிற்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் திரைத்துறையினர் சார்பில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த விஷால், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More →

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு: அய்யாக்கண்ணு

Jul 24, 2017

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிடாவிட்டால் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவியை பார்ப்பதற்காக அய்யாக்கண்ணு நேற்றிரவு திருச்சி வந்தார். இன்று காலை டெல்லி புறப்படுவதற்கு முன்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

Read More →

மந்திரத்தை ஜபித்தால் சீனாவை வீழ்த்தலாம் : ஆர்.எஸ்.எஸ். யோசனை

Jul 24, 2017

சிக்கிம் எல்லையில் உள்ள டோகோலாம் பகுதியை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை, ஒரு மந்திரத்தை நாள்தோறும் பூஜையின்போது ஜபிப்பதால் தடுக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். யோசனை கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினரான, இந்தரேஷ் குமார் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ” ‘கைலாஷ், ஹிமாலயா, திபெத் ஆகிய பகுதிகளுக்கு, சீன ராட்சசனின் பிடியில் இருந்து விடுதலை வேண்டும்’ என, தினமும் காலையில் பூஜை செய்யும்போது, ஐந்து முறை கூற வேண்டும். ஹிந்துக்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும், இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். சீனா வன்முறையின் ஒரு வாக்காளியாக மாறிவிட்டது. சீனா ஒரு ஏகாதிபத்திய மற்றும் விரிவாக்க பாத்திரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் குமார் கூறினார்.

Read More →

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

Jul 23, 2017

குளச்சல் போரில் திருவிதாங்கூர் படைகள் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெற்றி பெற்றதன் நினைவு தினம் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இப்போரின் வரலாற்றை கேரளாவை போல், தமிழகத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினெட்டாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன. வேணாட்டின் அரசரான மார்த்தாண்ட வர்மா அண்மையிலுள்ள சிறு சமஸ்தானங்களுடன் போரிட்டு தனது அரசுடன் இணைத்துக் கொண்டிருந்தார். இதன் முன்னதாக மிளகு வியாபாரத் தலங்களை டச்சுக்காரர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »