Latest Posts

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு

Jul 31, 2017

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற ரஷ்யாவின் அதிபர் புடின் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஜனநாயகக் கட்சியினராலும், ஊடகங்களாலும், சில குடியரசு கட்சியினராலும் எழுப்பப் பட்டிருந்தது.

Read More →

பாஜக பல மானிலங்களில் நடத்தும் குதிரை பேர அரசியலின் விளைவாக ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுகிறது

Jul 30, 2017

பீகார், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மானிலங்களில் பா.ஜ.க.வினால் நிகழ்த்தப்படும் குதிரைபேர அரசியலின் விளைவாக, பா.ஜ.க.வுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ராஜ்யசபாவில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் பெரும்பான்மை பெற, 123 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தற்போது, 80 எம்.பி.,க்களின் ஆதரவு தான் உள்ளது. பீகாரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வின் பின்புல வேலைகளால் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., கூட்டணி அரசு உருவாகி உள்ளது. எனவே, ஐக்கிய ஜனதா தளத்தின், ஒன்பது எம்.பி.க்களின் ஆதரவை சேர்த்தால், தே.

Read More →

மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி - டிவிஷனில் இந்தியா வெற்றி

Jul 30, 2017

மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி-டிவிஷனில் இந்தியா கசாகஸ்தானை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 15 நாடுகள் கலந்து கொண்ட இத்தொடரில் ஏ மற்றும் பி டிவிஷன் என இரு பிரிவுகளாக பெங்களூருவில் கடந்த 1 வாரமாக நடைபெற்று வந்தது. இதில் பி டிவிஷன் இறுதி சுற்றில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டது. நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான இந்த போட்டியில் கஜகஸ்தானை 75 – 73 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை இந்திய அணி சூடியது. தலா 73 புள்ளிகளை சேர்த்திருந்த இரு அணிகளும், ஆட்டம் முடிய 21 வினாடிகள் இருந்த நிலையில் இந்திய வீராங்கனைகள் இரண்டு புள்ளிகளை சேர்த்து ஆட்டத்தை வெற்றி பாதைக்கு திருப்பினர்.

Read More →

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் இந்தியாவில் பெரும் மாற்றமாம்: மோடி சொல்கிறார்

Jul 30, 2017

ஜிஎஸ்டி வரி விதிப்பினால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், சகல பெருட்களின் விலைகளும் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று வானொலியில் உரையாற்றிய நரேந்திர மோடி, சிறந்த முன்மாதிரியான திட்டத்துக்கு இது ஒரு உதாரணம் என்றார். மேலும் அவர் கூறியதாவது: நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கண்காணித்து வருகிறோம். அங்கு மத்திய மாநில அரசுகள் மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளன. மீட்பு படையினர் தன்னலமில்லாமல் உழைத்து வருகின்றனர். நிவாரண பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. உலக வெப்பமயமாதலால் எதிர்மறை பாதிப்பு ஏற்படுகிறது.

Read More →

அப்துல்கலாம் சிலை அருகே பைபிள், குரான் அகற்றப்பட்டன

Jul 30, 2017

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபத்தை ராமேஸ்வரம் பேக்கரும்பில் பிரதமர் மோடி கடந்த 27ல் திறந்துவைத்தார். அப்துல் கலாமின் மணிமண்டபத்தில் அவர் வீணை வாசிப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டதுடன், அதனருகில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மட்டும் வைக்கப்பட்டது. சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரங்களினால், அப்துல்கலாமின் அண்ணன் பேரன் சலீம், பகவத் கீதைக்கு அருகில் குரான் மற்றும் பைபிள் ஆகிய புனித நூல்களையும் வைத்தார். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவற்றை கலாமின் அண்ணன் பேரன் சலீம் அகற்றி அங்கிருந்த கண்ணாடிபேழைக்குள் வைத்தார். மக்கள் ஜனாதிபதியான அப்துல் கலாம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி மாணவர்கள் மத்தியில் உரையாற்றி கொண்டிருந்த போது திடீரென காலமானார்.

Read More →

பால்முகவர்கள் சங்கம் எச்சரிக்கை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்

Jul 30, 2017

பால்முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து குற்றம்சாட்டும் வகையில், பணத்தை பெற்றுக்கொண்டு தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால்முகவர்கள் சங்கம் செயல்படுவதாக கூறிவருகிறார். அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தமக்கு சிலவாரங்களாக பால் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார். தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர தனி மனித தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அடுத்தவாரம் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.

Read More →

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

Jul 29, 2017

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வெள்ளிக்கிழமை வடகொரியா நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் குறித்து கூறுகையில், “வடகொரியாவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்றது, ஆபத்தானது.

Read More →

பெங்களூரு மெட்ரோவில் இந்தியில் பெயர்ப்பலகை கூடாது : முதல்வர் சித்தராமையா

Jul 29, 2017

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதற்கு எதிராக கன்னட அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்ப்பலகை வைக்கலாகாது என எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் கன்னட அமைப்பினர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி பெயர்ப்பலகைகளை தார் பூசி அழித்தனர். மேலும் மெட்ரோ வில் பணியாற்றும் இந்தி பேசும் அதிகாரியை இடமாற்றம் செய்யக் கோரியும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் சித்தராமையா நேற்று எழுதிய கடிதத்தில், “பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் சரிபாதி நிதியில் உருவாக்கப்பட்டுள்ளது.

Read More →

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரில் தஞ்சம், 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

Jul 29, 2017

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளனர். குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் மூன்று பேர் பா.ஜ.க.வி. இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலை மேலும் தொடராமல் தடுக்க எஞ்சிய எம்.எல்.ஏ.க்கள் 44 பேரும் இரவோடு இரவாக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Read More →

வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலரான ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக ஜான் கெல்லி நியமனம்

Jul 29, 2017

வியாழனன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலராக இருந்த ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ஜான் கெல்லியை நியமித்துள்ளார். ஓய்வு பெற்ற ஜெனரலும் அரசினால் கௌரவப்படுத்தப் பட்டவருமான ஜான் கெல்லி குடிவரவு அமலாக்கத்தினை தனது நிர்வாகம் நடைமுறைப்படுத்த வழிவகுத்தவர். இந்த அதிர்ச்சிகரமான மாற்றம் ப்ரீபஸுக்கும் புதிய வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் அந்தோனி ஸ்காரமுக்கிக்கும் இடையே, வெஸ்ட் விங்ஙில் இந்த வாரம் வெளிப்படையாக நிகழ்ந்த மோதல்கள் எல்லவற்றுக்கும் முத்தாய்ப்பாக நிகழ்ந்துள்ளது. அந்தோனி ஸ்காரமுக்கி வெள்ளை மாளிகையின் பதவியில் நியமிக்கப் பட்டபின், ஊடகச் செயலாளர் ஷான் ஸ்பைசர் அதனை ஆட்சேபித்து, ஒரு வாரத்திற்கு முன்னர் பதவி விலகினார்.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »