இந்திய ரிசர்வ் வங்கி

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது

பணமதிப்பு நீக்க நடவடிக்கை துவங்கிய 8 மாதங்களுக்குப் பிறகும் செல்லாத நோட்டுகள் எண்ணும் பணி தொடர்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது தெரிந்ததே. இத்தகவல் சமூக வலைத்தளங்களிலும் மக்களிடையேயும் பலவிதமாக சரமாரியாக கிண்டல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுகுறித்து காங்கிரஸ்  துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், ரிசர்வ் வங்கிக்கு மட்டுமின்றி, பிரதமர் அலுவலகத்துக்கும் கணக்கு ஆசிரியர்களை  நியமிக்கலாம் என்று கிண்டலாகக் கூறியுள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தனது ட்விட்டரில், “பணமதிப்பு நீக்கத்துக்கு 8 மாதங்கள் கழித்து ஆர்பிஐ நோட்டு எண்ணும் …

பணமதிப்பு நீக்கம் துவங்கி 8 மாதங்கள் கழித்தும் செல்லாத நோட்டு எண்ணிக்கை தொடருகிறது Read More »

Share

லாக்கரில் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் பேங்க்

வங்கிகளில் உள்ள லாக்கரில் விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் போன்றவற்றை வைத்தால் அவை பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஒரு வேளை அவை திருட்டு போய்விட்டால், வங்கி நிர்வாகம் அதற்கு பொறுப்பேற்று விடும் என்றும் பொதுமக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல, வங்கிகள் அதற்கு பொறுப்பு ஏற்காது என்ற கசப்பான உண்மை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வக்கீல் குஷ் கல்ரா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாரத ரிசர்வ் வங்கியும், 19 பொதுத்துறை வங்கிகளும் அளித்த பதிலில் தெரியவந்தது. …

லாக்கரில் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது: ரிசர்வ் பேங்க் Read More »

Share

பணமதிப்பு நீக்கம்: பொருளாதாரம் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்புகிறது; தகவல்களை மூடிமறைப்பதில் ஆர்.பி.ஐ. தீவிரம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் துவங்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு, அதன் தாக்கம் மெதுவாகக் குறைவதாகத் தெரிகிறது. இந்நடவடிக்கையின் முழு பாதிப்புகளும் இன்னும் அறியப்படாத நிலையில், ஆர்.பி.ஐ. யும் பிரதமர் அலுவலகமும் தகவல்களை மூடி மறைப்பதில் தீவிரமாக இருக்கின்றன. இந்த நடவடிக்கை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் ஆர்பிஐ-க்கும் இடையே நடைபெற்ற ஆவணப்பரிமாற்றங்களின் நகல்களை  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) அடிப்படையிலான ஒரு மனு கோரியிருந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தீர்மானித்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு கேடு …

பணமதிப்பு நீக்கம்: பொருளாதாரம் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்புகிறது; தகவல்களை மூடிமறைப்பதில் ஆர்.பி.ஐ. தீவிரம் Read More »

Share

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய வழக்கில் ஜாமீன் மறுப்பு!

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சேகர் ரெட்டிக்கு உதவியதாக கைதான கொல்கத்தா தொழிலதிபர் பாரஸ்மல் லோதாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 147 கோடி ரொக்கம், 178 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் முறைகேடான முறையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். 

இவர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக, கடந்த ஜனவரி 3ஆம் தேதி  தொழிலதிபர் பாரஸ்மல் லோதாவை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கோரி லோதா சார்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த மனு சிபிஐ நீதிமன்ற நீதிபதி வெங்கடசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணை முழுமையாக முடியாத நிலையில் பரஸ்மல் லோதாவுக்கு ஜாமின் வழங்க கூடாது என சி.பி.ஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தற்போதைய நிலையில் ஜாமின் வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Share

ஏடிஎம்மில் எடுத்த புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறவில்லை

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. இதனையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சு பிழை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அப்போது உடனடி தேவை என்ற நிலையில் அவசரமாக அச்சடிக்கப்பட்டதால் இந்த பிழை நேரிட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது வரையில் 500 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு …

ஏடிஎம்மில் எடுத்த புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறவில்லை Read More »

Share

உலகெங்கிலும் உள்ள திறமைகள் இன்றி ஆப்பிள், ஐபிஎம் வளர்ந்திருக்க முடியுமா? – உர்ஜிட் படேல்

அமெரிக்க தற்காப்புவாதக் கொள்கைகளை விமர்சிக்கும் விதமாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல், உலகம் முழுதும் உள்ள திறமைகளின் பங்களிப்பின்றி ஆப்பிள், ஐபிஎம் நிறுவனங்கள் வளர்ந்திருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். நியூயார்க்கில் சொற்பொழிவாற்றிய பிறகு உர்ஜித் படேல் கூறியதாவது: உலகின் மிகத்திறமை வாய்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு விலைகள் உலகெங்கிலும் வந்து பங்களிப்பு செய்த திறமைகள் இன்றி உயர்ந்திருக்க முடியுமா? உலகத்திறமைகளின் பங்களிப்பு இல்லாமல் ஆப்பிள் எங்கிருந்திருக்கும்? சிஸ்கோ எங்கு இருந்திருக்கும்? ஐபிஎம் எங்கு இருந்திருக்கும்? இதற்குத் …

உலகெங்கிலும் உள்ள திறமைகள் இன்றி ஆப்பிள், ஐபிஎம் வளர்ந்திருக்க முடியுமா? – உர்ஜிட் படேல் Read More »

Share
Scroll to Top