தலைப்புச் செய்திகள்

2.7 மைல் அகலமுள்ள பாரிய விண்கல் செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும்

2.7 மைல் அகலமுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள பாரிய விண்கல் ஒன்று, இவ்வருடம், செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப் போகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. ஃப்ளாரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பெரிய விண்வெளிப் பாறை நமது கிரகத்திலிருந்து 4.4 மில்லியன் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும். இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 18 மடங்கு அதிக தூரமாகும். நாசாவின் கூற்றுப்படி, இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள, இந்த …

2.7 மைல் அகலமுள்ள பாரிய விண்கல் செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் Read More »

Share

தண்டவாள பராமரிப்பு பணி காரணம் – உ.பி.-யில் ரயில் விபத்து: 23 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகியும்,  72 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். முதல்கட்ட விசாரணையில், விபத்திற்கான காரணம் தெரியவந்துள்லது. ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றதைக் குறித்து உத்கால் எக்ஸ்பிரஸ் டிரைவரிடம் தெரிவிக்கப்படாததால், இவ்விபத்து நேரிட்டது என  தெரியவந்து உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பூரி ஹரித்துவார் – கலிங்கா இடையே உத்கல் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மாலை 5.46 மணியளவில் முசாஃபர்நகர் அருகில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், …

தண்டவாள பராமரிப்பு பணி காரணம் – உ.பி.-யில் ரயில் விபத்து: 23 பேர் பலி Read More »

Share

இழுபறியில் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணி இணைப்பு

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் பிரிந்த அதிமுக கோஷ்டிகளில் முக்கிய இரண்டு கோஷ்டிகளான, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) ஆகியோரின் இரு அணிகளும் 7 மாத பிரிவுக்கு பிறகு விரைவில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு அணிகளும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் எவ்வித வித்தியாசமும் காட்டுவதில்லை. ஆதலால், பா.ஜ.க. -வின் தமிழக மற்றும் மத்திய தலைவர்கள் இவ்விரு அணிகளையும் ஒன்று சேர்த்தால் தமிழகத்தில் பா.ஜ.க. வளர வாய்ப்பு …

இழுபறியில் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணி இணைப்பு Read More »

Share

ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல்: பாதசாரிகள் மீது வேனை மோதி 12 பேர் பலி

ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகரில் சாலையின் நிழல் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது வேனை மோதியதில் 12 பேர் பலியாகியுள்ளனர். பயங்கரவாத அமைப்பான ஐஸிஸ் ( ISIS) இத்தாக்குதலை தாம் செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், போலீசார் இதனை தீவிரவாத தாக்குதலாகவே கருதுவதாக  தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் மரங்களின் நிழல் சூழ்ந்த பாதசாரிகள் செல்லும் பக்கவாட்டுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக வாகனத்தை ஓட்டியதில் பலர் …

ஸ்பெயினில் பயங்கரவாத தாக்குதல்: பாதசாரிகள் மீது வேனை மோதி 12 பேர் பலி Read More »

Share

லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கை கலப்பு குறித்து தெரியாது: சீனா

இந்திய சுதந்திர தினத்தன்று, லடாக் பாங்கோங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது. இது குறித்து சீன அரசுக்குத் புகார் அளிக்கப் பட்டபோது, தமக்கு எதுவும் தெரியாது என சீனா தெரிவித்துள்ளது. நேற்று காலை 6 மணிக்கு, மீண்டும் 9 மணிக்கு என இரண்டு தடவை சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் வர முயன்றனர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி …

லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கை கலப்பு குறித்து தெரியாது: சீனா Read More »

Share

வட கொரியா: குவாம் மீதான ஏவுகணைத் தாக்குதல் திட்டம் நிதானம் ஆகியுள்ளது

அமெரிக்காவின் பகுதியான குவாம்க்கு அருகே, ஏவுகணைகளால் தாக்கும்  திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுருப்பதாகத் தெரிகிறது. இத்திட்டம்  பற்றி, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். அமெரிக்கக் கடற்படைத் தளங்களும், ஆகாயப் படைத் தளங்களும் அமைந்திருக்கும் பகுதி, குவாம். குவாமுக்கு அருகில் 4 ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான விரிவான திட்டம் தொடர்பான விவரங்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் உறுதிபடுத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் கடந்த வாரம் கூறியிருந்தது. இத்திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் …

வட கொரியா: குவாம் மீதான ஏவுகணைத் தாக்குதல் திட்டம் நிதானம் ஆகியுள்ளது Read More »

Share

இந்தியாவின் 71-ம் சுதந்திர தினம்: பிரதமர் மோடி கொடியேற்றி உரை

இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தின விழா டெல்லியில் சிறப்பாக நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. “1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தியதி” என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், “நமது நாட்டின் உதய நாள்” என்றால் சொன்னால் அது மிகையாகாது. இதனை முன்னிட்டு, தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது : “வரலாற்று சிறப்பு …

இந்தியாவின் 71-ம் சுதந்திர தினம்: பிரதமர் மோடி கொடியேற்றி உரை Read More »

Share

நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு அவசியம் என்ற விதியிலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழகத்தின் அவசர சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பின்னர் இது சம்பந்தமான பல வழக்குகளின் பின்னர், தமிழக மருத்துவக்  கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் …

நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு Read More »

Share

முரசொலி பவளவிழா : மீண்டும் செப். 5-ம் தேதி நடைபெறும்

மழை பெய்ததால் ஒத்திவைக்கப்பட்ட முரசொலி பவளவிழா, மீண்டும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலி பத்திரிகை துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து,  சென்னையில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆகஸ்டு 10 (வியாழன்) அன்று நிகழ்ந்த பவள விழா வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் …

முரசொலி பவளவிழா : மீண்டும் செப். 5-ம் தேதி நடைபெறும் Read More »

Share

உ.பி. மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி: யோகி அரசின் அலட்சியமே காரணம் ?

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இம்மருத்துவமனையில் பிராண வாயு விநியோகிக்கும் நிறுவனத்துக்கு ரூ.69 லட்சத்தை அரசு வழங்காமல் நிலுவை வைத்ததன் நிமித்தம், அந்நிறுவனம் ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 100வது வார்டில் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்கத்தால் துன்பப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த 100வது வார்டு ஆண்டுதோறும் குறிப்பாக மழை காலத்தில் …

உ.பி. மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி: யோகி அரசின் அலட்சியமே காரணம் ? Read More »

Share
Scroll to Top