விளையாட்டு

மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி-டிவிஷனில் இந்தியா வெற்றி

மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி-டிவிஷனில் இந்தியா கசாகஸ்தானை  வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 15 நாடுகள் கலந்து கொண்ட இத்தொடரில் ஏ மற்றும் பி டிவிஷன் என இரு பிரிவுகளாக பெங்களூருவில் கடந்த 1 வாரமாக நடைபெற்று வந்தது. இதில் பி டிவிஷன் இறுதி சுற்றில் பலம் வாய்ந்த கஜகஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டது. நேற்றிரவு நடைபெற்ற பரபரப்பான இந்த போட்டியில் கஜகஸ்தானை 75 – 73 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை இந்திய …

மகளிர் ஆசியகோப்பை கூடைபந்தாட்டம் பி-டிவிஷனில் இந்தியா வெற்றி Read More »

Share

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வென்றது இங்கிலாந்து

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை  இங்கிலாந்து அணி வென்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை, இறுதிப் போட்டியில் பங்கேற்றதே பெரிய சாதனைதான். டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.முதலில் நிதானத்துடன் ஆடிய இங்கிலாந்து அணி 150 ரன்களுக்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சாரா டெய்லர்  45 ரன்களும், நாட் ஸ்கைவர் 51 ரன்களையும் அடித்து இங்கிலாந்த் அணிக்கு வலுசேர்த்தனர். இந்திய அணியின் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளையும், …

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியை வென்றது இங்கிலாந்து Read More »

Share

‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாசப்படுத்திய டோனி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி நடந்த சிக்சர் அடிக்கும் போட்டியில் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்சின் முன்னாள் கேப்டனுமான டோனி மூன்று சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.15 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள் இடையே சிக்சர் அடிக்கும் போட்டி ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் அரங்கேறியது. இதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் …

‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாசப்படுத்திய டோனி Read More »

Share

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின்  அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி, தற்போதைய சாம்பியனான ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியைச் சந்திக்கவுள்ளது. இப்போட்டியில் 171 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்து காட்டியிருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், எனது வாழ்க்கையில் நான் விளையாடிய மிகச்சிறந்த ஆட்டம் இது தான் என்றும் கூறினர். இந்திய கேப்டன் …

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி Read More »

Share

மாரத்தான் போட்டியில் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளின் கல்வி உதவிக்காக தேசிய தடகள அமைப்பும், புனேவில் உள்ள ‘ஷர்ஹாத்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் நேற்று மாரத்தான் போட்டியை நடத்தின. இதில் 21.1 கி.மீ. தூரத்துக்கான பிரிவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இந்த மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். …

மாரத்தான் போட்டியில் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு Read More »

Share

கிரிக்கெட் டெஸ்ட் தொடர்: முரளி விஜய் விலகல், ஷிகர் தவான் சேர்ப்பு

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் காயம் காரணமாக விலகியுள்லார்.  ஆஸ்திரேலிய தொடரின் போது  மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் குணம் அடையாததால் அணியில் இருந்து …

கிரிக்கெட் டெஸ்ட் தொடர்: முரளி விஜய் விலகல், ஷிகர் தவான் சேர்ப்பு Read More »

Share

விம்பிள்டனை 8-வது முறையாக வென்றார் ரோஜர் பெடரர்

விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் மரின் சிலிச்சும் எதிர்கொண்டனர். போட்டியின் தொடக்கம் முதலே ரோஜர் ஃபெடரர் ஆதிக்கம் செலுத்தி, 6-3, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் வென்றார்.  ஒரு செட் கூட இழக்காமல் இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இதன்மூலம் விம்பிள்டன் போட்டியில் ஒற்றையரில் 8 பட்டங்கள் வென்று, அதிக பட்டங்கள் வென்ற வீரர் …

விம்பிள்டனை 8-வது முறையாக வென்றார் ரோஜர் பெடரர் Read More »

Share

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்

பி.சி.சி.ஐ. அறிவிப்பின்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் பந்துவீச்சு பயிற்சியாளராக  ஜாகீர் கானும், வெளிநாடுகளில்  டெஸ்ட் போட்டிகளில் ஆடும்போது பேட்டிங் ஆலோசகராக ராகுல் திராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்ட 10 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இதில் ஆறு பேர் நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. அணியின் …

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் Read More »

Share

20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட்கோலி, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். 4.4 ஓவர்களில் இந்திய அணி …

20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வி Read More »

Share

விம்பிள்டன் : ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் போட்டிகளில், ரோஜர் பெடரர் காலிறுதிக்கான தகுதி பெற்றார். அவர் ஜெர்மனியின் திறமையான ஆட்டக்காரரான மிஷா செவரேவ்வை 7-6(3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். முப்பத்தி ஐந்து வயதாகும் பெடரர் வெற்றி பெற்றால் அதிக வயதில் பட்டம் வென்ற வீரராக இருப்பார். பெடரர் கடந்த மூன்று ஆட்டங்களிலும் ஒரு செட்டைக் கூட இழக்காமல் வென்று வருகிறார். உலகின் முப்பதாவது தர நிலை வீரராக இருக்கும் செவரேவ் இதுவரை நான்கு முறை பெடரருடன் …

விம்பிள்டன் : ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி Read More »

Share
Scroll to Top