மாவட்டம்
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரிக்கை
பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லியில் நடந்த இந்த போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்குகொண்டனர். கூடுதல் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நதி நீர் இணைப்பு குறித்தும் கோரிக்கை வைத்தனர். டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்ததுடன், தமிழக அரசும் பாரபட்சமின்றி அனைத்து பயிர் கடன்களையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரினர். இதுபோல புதுச்சேரியிலும் விவசாயிகளுக்கு …
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரிக்கை Read More »
இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம்
இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் இனயத்தில் துறைமுகம் அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்து அதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இனயத்தில் வர்த்தக துறைமுகத்துக்கு பதிலாக பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி இந்த திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் …
இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் Read More »