பலவகைச் செய்திகள்

2017 சூரிய கிரகணத்தை அடுத்து ‘நிபிரு’ கிரகம் பூமியை அழிக்குமா? (சதித்திட்டக் கோட்பாட்டாளர்கள் அப்படி நினைக்கிறார்கள்)

உலகெங்கிலும் உள்ள சதி கோட்பாட்டாளர்களில் (Conspiracy Theorists) பலர், “நிபிரு” என்ற ஒரு கிரகம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூமியுடன் இடையில் மோதப்போவதாக கூறி வருகின்றனர். ஆகஸ்டு 21-ம் தேதி வரும் சூரிய கிரகணம், இந்த பேரழிவின் ஆரம்பத்தை அடையாளம் காணும் என்கின்றனர். ‘பிளானட் எக்ஸ் – தி 2017 வருகை’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட்  மீட், 2017 செப்டம்பர் 23 அன்று  நிபிரு என்ற கிரகம் (பிளானெட் எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது) நமது …

2017 சூரிய கிரகணத்தை அடுத்து ‘நிபிரு’ கிரகம் பூமியை அழிக்குமா? (சதித்திட்டக் கோட்பாட்டாளர்கள் அப்படி நினைக்கிறார்கள்) Read More »

Share

2.7 மைல் அகலமுள்ள பாரிய விண்கல் செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும்

2.7 மைல் அகலமுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள பாரிய விண்கல் ஒன்று, இவ்வருடம், செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப் போகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. ஃப்ளாரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த பெரிய விண்வெளிப் பாறை நமது கிரகத்திலிருந்து 4.4 மில்லியன் மைல்கள் தொலைவில் கடந்து செல்லும். இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 18 மடங்கு அதிக தூரமாகும். நாசாவின் கூற்றுப்படி, இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள, இந்த …

2.7 மைல் அகலமுள்ள பாரிய விண்கல் செப்டம்பர் 1 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் Read More »

Share

வெளிநாட்டில் இருந்து மகன் திரும்பியபோது எலும்புக்கூடாக தாய்

மும்பையின் அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயதான ஆஷா சஹானி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த கட்டிடத்திலுள்ள 10 – வது மாடியிலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களில் ஒன்றில் வசித்து வந்தார். அந்த தளத்திலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களும் சஹானி குடும்பத்தினருக்குச் சொந்தமானதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு அடிக்கடி செல்வதில்லை எனத் தெரிகிறது. ஆஷாவின் மகன் ரிதுராஜ் சஹானி, அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாயை பார்ப்பதற்காக நேற்று மும்பை வந்துள்ளார். வீட்டிற்கு வந்த …

வெளிநாட்டில் இருந்து மகன் திரும்பியபோது எலும்புக்கூடாக தாய் Read More »

Share

நாசா-வின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) சமீபத்தில் கோள் பாதுகாப்பு அதிகாரி (Planetary Protection Officer) என்ற வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்திருந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த  9 வயது சிறுவன் ஒருவன், தன்னை ஒரு விண்மீன் மண்டல பாதுகாவலர் (Guardian of the Galaxy) என்று கருதிக்கொண்டதால் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். மேலோட்டமாக இப்பதவியின் பெயர் “மென் இன் பிளாக்” (Men In Black) படத்தில் வரும் கதாநாயகர்களைப் போல பூமியை ஏலியன்களிடமிருந்து …

நாசா-வின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன் Read More »

Share

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

குளச்சல் போரில் திருவிதாங்கூர் படைகள் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெற்றி பெற்றதன் நினைவு தினம் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.  இப்போரின் வரலாற்றை கேரளாவை போல், தமிழகத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினெட்டாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன. …

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை Read More »

Share

சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் பெரிய கருப்புப் புள்ளிகள்

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம்  சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட சூரியப்புள்ளியை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் பரப்பளவு பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த பகுதி  சுழன்று வருவதுடன் விரைவாக வளர்ந்து வருகிறது  என நாசா ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது. சூரியனில் காணப்படும் கருப்புப்புள்ளிகள் பொதுவாக சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும். தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பகுதியிலிருந்து  பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகள் எழலாம் என கருதப்படுகிறது. …

சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் பெரிய கருப்புப் புள்ளிகள் Read More »

Share

ஜெர்மனி: மியூசியத்திலிருந்து 100 கிலோ தங்க நாணயத்தை கொள்ளையடித்தவர்கள் கைது

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் அரிய நாணயங்களை பாதுகாத்து வரும் போட் மியூசியம் என்ற அருங்காட்சியகம் உள்ளது.  இந்த அருங்காட்சியகத்தில் 5,40,000 நாணயங்கள் உள்ளன. ஜெர்மனியின் மதிப்புமிக்க அருங்காட்சியகங்களில் ஒன்றான இதற்கு குண்டுதுளைக்காத கண்ணாடியால் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இங்கு 100 கிலோ எடையில், 53 செ.மீ. விட்டம் 3 செ.மீ. தடிமன் அளவில் சுத்த தங்கத்தால் ஆன கனடா நாட்டு நாணயம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வந்தது. 2-ம் எலிசெபத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த நாணயம் தூய்மையான …

ஜெர்மனி: மியூசியத்திலிருந்து 100 கிலோ தங்க நாணயத்தை கொள்ளையடித்தவர்கள் கைது Read More »

Share

ஏ.டி.எம். உபயோகத்தில் வந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன

இன்றிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டன. பார்க்லேஸ் வங்கி இந்த் முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது. இந்த ஏடிஎம்கள் எப்படி பயன்பாட்டிற்கு வந்தன என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. ஷெப்பர்ட்-பேரென் என்பவர் ஒரே ஒரு நிமிடம் தாமதமாக வங்கிக்கு சென்றதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் வருத்தமுற்ற அவர் வங்கி மூடியிருந்தாலும் பணம் எடுக்க வசதியாக ஓர் இயந்திரம் இருந்தால் என்ன என்று சிந்தித்தார். அந்த …

ஏ.டி.எம். உபயோகத்தில் வந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன Read More »

Share

யுவபுரஸ்கார், பால சாகித்ய விருதுகளுக்கு கவிஞர் ஜெயபாரதி, நாடக கலைஞர் வேலு சரவணன் தேர்வு

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகளுக்கு தமிழ் மொழியில் ஜெயபாரதி, வேலு சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 35 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதும் வழங்கப்படுகின்றன. இதற்காக சாகித்ய அகாடமியின் நிர்வாக குழு கூட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் யுவ சாகித்ய புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் ஆகிய விருதுகளுக்கு தகுதி …

யுவபுரஸ்கார், பால சாகித்ய விருதுகளுக்கு கவிஞர் ஜெயபாரதி, நாடக கலைஞர் வேலு சரவணன் தேர்வு Read More »

Share

மைசூரு ராஜ பரம்பரையின் வாரிசும் 400 ஆண்டுகள் சாபமும்

தற்போதைய கர்நாடகா மாநிலத்தின் மைசூரு நகரை, 400 ஆண்டுகளுக்கு முன், விஜயநகர பேரரசின் திருமல ராஜா ஆட்சி செய்துவந்தார். அப்போது உடையார் அரசை சேர்ந்த ராஜா உடையார், மைசூரு மீது படையெடுத்து, வெற்றி பெற்றார். இதையடுத்து, திருமல ராஜா உடையார் குடும்பத்தினர், ஸ்ரீரங்கபட்டணத்தினுள்  நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள்,அருகிலுள்ள மாலகி கிராமத்தில் தங்கியிருந்தனர். திருமல ராஜா உடையாரின் இரண்டாவது மனைவி அலமேலம்மா அணிந்திருந்ததங்க ஆபரணங்கள், ராஜா உடையாருக்கு மிகவும் பிடித்து போனது. தன் படையினரை அனுப்பி, நகைகளை …

மைசூரு ராஜ பரம்பரையின் வாரிசும் 400 ஆண்டுகள் சாபமும் Read More »

Share
Scroll to Top