மாவட்டம்

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

குளச்சல் போரில் திருவிதாங்கூர் படைகள் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெற்றி பெற்றதன் நினைவு தினம் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.  இப்போரின் வரலாற்றை கேரளாவை போல், தமிழகத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினெட்டாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன. …

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை Read More »

Share

நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் உடனே மூடப்பட வேண்டும் : நீதிமன்ற ஆணை

நெல்லை சரவணா செல்வரத்தினம்  ஸ்டோர் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், அது உடனே மூடப்பட வேண்டும் என நீதிமன்ற ஆணை வெளியாகியுள்ளது. நெல்லையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக, நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் சரத் இனிகோ என்பவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த …

நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் உடனே மூடப்பட வேண்டும் : நீதிமன்ற ஆணை Read More »

Share

கொச்சி அருகே சரக்கு கப்பல் – படகு மோதல்: குளச்சல் மீனவர் உள்பட 3 பேர் பலி

கேரள மாநிலம் கொச்சி அருகே மீன்பிடி படகின் மீது சரக்கு கப்பல் பயங்கரமாக மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். இதில் 2 பேர் உடல் மீட்கப்பபட்டது. ஒருவர் உடலை தேடும் பணி இரவு வரை தொடர்ந்தது. கேரள மாநிலம் கொச்சி தோப்பும்படி துறைமுகத்தில் இருந்து, குமரியை சேர்ந்த 12 மீனவர்கள் உள்பட 14 பேர் படகில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு கொச்சியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் கடலில் படகை …

கொச்சி அருகே சரக்கு கப்பல் – படகு மோதல்: குளச்சல் மீனவர் உள்பட 3 பேர் பலி Read More »

Share

குளச்சல் அருகே படகு கடலில் கவிழ்ந்து 2 மீனவர்கள் சாவு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நடுக்கடலில் படகு கவிழந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ரசலையன், பெஞ்சமின், தாசன் ஆகிய மீன்று மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். குளச்சலில் இருந்து ஒன்றரை கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ராட்சத கடல் அலை தாக்கியதில் படகு கவிழ்ந்தது. கடலில் தத்தளித்த மூன்று மீனவர்களில், ரசலையன் மட்டும் கடலில் நீந்திக் கரை சேர்ந்தார். மாயமான மற்ற இருவரையும் தேடும் …

குளச்சல் அருகே படகு கடலில் கவிழ்ந்து 2 மீனவர்கள் சாவு Read More »

Share

இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தாய்

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகளை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாயை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. மீண்டும் பெண் குழந்தைகள் பிறந்ததால் விரக்தியடைந்த திவ்யா குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் திவ்யா கொலை …

இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தாய் Read More »

Share

விவசாயிகள் தஞ்சையில் 7-வது நாளாக ரயில் மறியல் போராட்டம்

தஞ்சை: காவிரி தீர்ப்பாயத்தை கலைக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெட்டிப்பாயைத்தில் 7வது நாளாக ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்துநிறுத்த வேண்டும், காவிரி தீர்ப்பாயத்தை கலைக்ககூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்பு குழுவினர் கடந்த 7 நாட்களாக இந்த போராட்டம் நடத்தி வருகின்றனர். 7-வது நாளான இன்று, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், தஞ்சை சாலியமங்கம் ரயில்வே கேட்டில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் ஒற்றைத் தீர்ப்பாயச் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சாகுபடி கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் மே 15 முதல் 21 வரை ஒரு வாரத்துக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத் தில் 4 இடங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பூதலூர் அருகே அய்யனாபுரத்தை அடுத்த விண்ணணூர்பட்டியில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணிய ரசன் தலைமையில் திரைப்பட இயக்குநர் மு.கவுதமன், தமிழ்த் தேசிய இயக்க பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் ஆகி யோர் தலைமையில் விவசாயி கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற பயணிகளை ரயிலை மறித்தனர்.

Share

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரிக்கை

பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லியில் நடந்த இந்த போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்குகொண்டனர். கூடுதல் வறட்சி நிவாரணம் வழங்க  வேண்டும் என்றும் நதி நீர் இணைப்பு குறித்தும் கோரிக்கை வைத்தனர். டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்ததுடன், தமிழக அரசும் பாரபட்சமின்றி அனைத்து பயிர் கடன்களையும் ரத்து செய்யவேண்டும் என்று கோரினர். இதுபோல புதுச்சேரியிலும் விவசாயிகளுக்கு …

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரிக்கை Read More »

Share

இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம்

இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் இனயத்தில் துறைமுகம் அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்து அதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இனயத்தில் வர்த்தக துறைமுகத்துக்கு பதிலாக பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி இந்த திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் …

இனயம் துறைமுக திட்டத்தை கைவிட கோரி நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் Read More »

Share
Scroll to Top