சென்னை

சென்னை தேனாம்பேட்டை போலிஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை தேனாம்பேட்டை போலிஸ் ஸ்டேஷன் மீது நேற்று அதிகாலை 4.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். காவல்நிலைய பெயர்ப்பலகையின் மீது பட்டு, நுழைவாயிலில் விழுந்த குண்டு, அங்கேயே தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார், தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். போலிஸ் ஸ்டேஷன் அருகில் அரசியல் கட்சி பேனர் கட்டிக் கொண்டிருந்தவர்கள் கூறிய பிறகே, உள்ளே இருந்த காவலர்களுக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக …

சென்னை தேனாம்பேட்டை போலிஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு Read More »

Share

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாடுகளுக்குள் விழுந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் மீட்பு

சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த மாதம் 31–ந்தேதி தீயில் கருகி உருக்குலைந்தது. இதனால் 2–ந்தேதி அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. கட்டிடத்தின் முகப்பு பகுதியை இடிக்கும் போது 6–வது தளத்தில் இருந்து பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் கீழே விழுந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியது. 20–ந்தேதி சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை எடுக்கும் பணி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் …

சென்னை சில்க்ஸ் கட்டிட இடிபாடுகளுக்குள் விழுந்த பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டகம் மீட்பு Read More »

Share

சென்னை செங்குன்றத்தில் ரூ.71 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை செங்குன்றத்தில் அதிரடி சோதனையின் போது ரூ.71 கோடி போதைப்பொருள்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழு செங்குன்றத்தில் செயல்பட்டுவரும் தனியார் கிடங்கில் சோதனையில் ஈடுபட்டனர். அக்கிடங்கில் வெளிநாடுகளுக்கு துணிகள் வடிவமைக்கும் பணியும், பேக்கிங் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் சோதனையில் ரூ.71 கோடி மதிப்பிலான 3 வகையான போதைப் பொருட்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

Share

ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் உயர்நீதி மன்றம் விளக்கம் கேட்கிறது

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி போராட்டத்தின்போது மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து அறிக்கை அளிக்க, ஐஐடி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாட்டிறைச்சி தடையை கண்டித்து சென்னை ஐஐடியில் மாணவர்கள் சார்பில் மாட்டிறைச்சி விருந்து நடத்தப்பட்டது. அப்போது, விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த சூரஜ் என்பவர் மீது மாணவர் அமைப்பினர் சிலர் தாக்குதல் நடத்தினர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க ஐஐடி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாணவி டிட்டி மேத்யூ என்பவர் சென்னை …

ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் உயர்நீதி மன்றம் விளக்கம் கேட்கிறது Read More »

Share

சட்டபேரவை முடியும் வரை சென்னை போலீசாருக்கு விடுமுறை இல்லை

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், நேற்று துவங்கியது. இந் நிலையில், ஜூலை, 19 வரை,  ‘லாக்கப் டெத்’ தவிர்க்கும் வகையில் விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை, மாலை, 6:00 மணிக்கு மேல் இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கவும், போலீசார், அதிகாரிகள் விடுமுறை எடுக்கவும், உயரதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் ஆகிய சம்பவங்கள் நடக்கும் நிலையில், போலீசார், அதிகாரிகள் எக்காரணம் கொண்டும், லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்துதல், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்க …

சட்டபேரவை முடியும் வரை சென்னை போலீசாருக்கு விடுமுறை இல்லை Read More »

Share

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி ஒத்திவைப்பு

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 4 மற்றும் 5வது தளத்தில் தீ எரிந்து வருவதால் கட்டடத்தின் மீதமுள்ள பகுதிகளை இடித்து தரைமட்டமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை சில்க்ஸில் கடையில் நேற்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. கடந்த 2 நாள்களாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தனர். இதனிடையே கட்டடத்தின் முகப்பு பகுதியும், 4 மாடிகளும் சீட்டுக் கட்டு போல் சரிந்து விட்டது. இந்நிலையில் மீதமுள்ள …

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி ஒத்திவைப்பு Read More »

Share

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து

தியாகராய நகர் குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிகாலை முதலே கரும்புகை வெளியேறுவதால் தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாடியைக் கொண்ட கட்டடத்தில் குமரன் சில்க்ஸ் துணிக்கடை மற்றும் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அடுக்குமாடிக் கடையின் தரைத்தளத்தில் இருந்து இன்று காலை பயங்கர கரும்புகை வெளியேறியது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறைக்கு …

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து Read More »

Share
Scroll to Top