ஜெயலலிதா

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த எந்த விசாரணையையும் சந்திக்க தான் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்  75 நாட்கள் சிகிச்சை பெற்று, பின்னர்  டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. அதிமுகவின் ஒரு கோஷ்டியான, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான, அதிமுக புரட்சி தலைவி …

ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார்: அப்பல்லோ பிரதாப் ரெட்டி Read More »

Share

போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீபா நுழைய முயன்றதால் பதற்றம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயல்வதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜெ.தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நீண்ட நேரம் கழித்து போயஸ் …

போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீபா நுழைய முயன்றதால் பதற்றம் Read More »

Share

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்க மோடிக்கு முதல்வர் அழைப்பு

பிரதமர் மோடியிடம் சட்டசபையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைக்க வேண்டி அழைப்பு விடுத்ததாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழக முதல்வராக எடப்பாடி கே பழனிச்சாமி பதவியேற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோதியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். பிரதமர் சந்திப்பு குறித்து தில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் …

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் திறந்து வைக்க மோடிக்கு முதல்வர் அழைப்பு Read More »

Share

கொடநாடு கொலை தொடர்பாக தினகரன், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டம்

கடந்த ஏப்ரல் 24-ந் தேதி 11 பேர் கும்பல், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்ததுடன் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூரை தாக்கிய செய்தி ஏற்கெனவே தெரிந்ததே. தொடர்ந்து இந்த கும்பல், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைக்குள் சென்று 3 சூட்கேஸ்களில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். போலிஸ் விசாரணையில், ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ், அவரது கூட்டாளி சயான் உள்பட 11 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய …

கொடநாடு கொலை தொடர்பாக தினகரன், சசிகலாவிடம் விசாரணை நடத்த திட்டம் Read More »

Share

கொடநாட்டில் கொலை: ஜெயலலிதா உயில் கொள்ளை போனதா?

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொகுசு பங்களாவில் கடந்த மாதம் 23-ந்தேதி இரவு 11 பேர் கும்பல் புகுந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டது. காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் அடைந்தார். பங்களாவுக்குள் புகுந்த கும்பல், ஜெயலலிதா தங்கும் அறையை குறி வைத்து உடைத்து பொருட்களை அள்ளிச் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேரில் தலைவனாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் அருகே …

கொடநாட்டில் கொலை: ஜெயலலிதா உயில் கொள்ளை போனதா? Read More »

Share

கொடநாடு பங்களா காவலாளி கொலையில் குற்றவாளி சிக்கினார்

கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த நபர் சிக்கினார். கடந்த 24ம் தேதி(ஏப்.,24) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த நபர் பிடிபட்டார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அளக்கரை அருகே சொகுசு பங்களாவில் சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு மொபைல் போன் …

கொடநாடு பங்களா காவலாளி கொலையில் குற்றவாளி சிக்கினார் Read More »

Share
Scroll to Top