ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி
ஹைத்ராபாத்: அன்பு எனும் அடைமழையால் நனைய வைத்த ரசிகர்களுக்கு நடிகர் பிரபாஸ் நன்றி தெரிவித்துள்ளார். நன்றிக்கடனாக முழுத்திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்க முயன்றுள்ளேன் எனவும் கூறியுள்ளார். பாகுபலி படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் நோடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பு தந்த ராஜமௌலிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பாகுபலி-2 திரைப்படம் வெளியாகி 9 நாட்களில் ரூ1,000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.