நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர் அதனை மனத்தில் கொள்ளார்
இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும் கலந்து பழிகாணார் சான்றோர்; – கலந்தபின் தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார் தாமும் அவரின் கடை. -நாலடியார் # 227 விளங்கும் நீர்மிக்க குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டின் அரசனே! நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர், அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார். நட்புச் செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரைவிடத் தாழ்ந்தவராவர். Lord of the cool land where the waters brightly shine! …
நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர் அதனை மனத்தில் கொள்ளார் Read More »