சிந்தனைக்கு

ஈசாப் கதைகள் – மீன்பிடிப்பது எப்படி

மீன்பிடிப்பது எப்படி நீதி : தொழிலுக்கு எந்த உபகரணம் தேவை என்று கண்டறிந்து அதனை உபயோகப்படுத்து. See the English version here

Share

ஈசாப் கதைகள் – ஆப்பிள், மாதுளை & முட்புதர்

ஈசாப் கதைகள் – ஆப்பிள், மாதுளை & முட்புதர் நீதி :  ஒவ்வொருவரும் தான் மற்றவரைவிட உயர்ந்தவர் என நினைப்பது இயல்புதான். ஆனால்,  மற்றவருடன் சண்டையிட்டு, பின்னர் தம்மைவிட மிக மிக எளியோரால் சமாதானம் செய்துவைக்கப்பட வேண்டிய நிலைவரைச் செல்லவேண்டாம். See the English version here

Share

நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர் அதனை மனத்தில் கொள்ளார்

இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும் கலந்து பழிகாணார் சான்றோர்; – கலந்தபின் தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார் தாமும் அவரின் கடை. -நாலடியார் # 227 விளங்கும் நீர்மிக்க குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டின் அரசனே! நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர், அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார். நட்புச் செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரைவிடத் தாழ்ந்தவராவர். Lord of the cool land where the waters brightly shine! …

நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர் அதனை மனத்தில் கொள்ளார் Read More »

Share

தம்மை விரும்பாதவர் பின் செல்வது எத்தகையது ?

தம்மை விரும்பாதவர்களைப் பின் தொடர்ந்து சென்று, எப்படியாவது அவர்களைத் தம்மை விரும்பச் செய்யுமாறு மாற்றிவிடலாம் என்று நினைப்பவர் கொள்ளும் அற்பமான உறவு, தனது ஒரு கையால் கல்லை எடுத்து இன்னொரு கையை அடித்துப் போக்கிக் கொள்வது போலாகும். தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை எங்கண் வணக்குதும் என்பர் – புன்கேண்மை நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப! கற்கிள்ளிக் கையிழந் தற்று. நாலடியார் : பாடல்-336   உரை: நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்தற்குரிய கடற்கரையையுடைய வேந்தனே! தம்மிடம் …

தம்மை விரும்பாதவர் பின் செல்வது எத்தகையது ? Read More »

Share

தேடிய செல்வம் நிலைக்காமல் நீங்கும் காரணங்கள்

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும் செல்வம் உடைக்கும் படை பாடியவர்: நல்லாதனார் : திரிகடுகம் # 38     பாடுபட்டுச் சேர்த்தச் செல்வத்தைச் பாதுகாக்கவே எவரும் நினைப்பர். ஆயினும், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தக்கார் துணையைப் பெறுதல் முடியாது. அதனால் அவர்தம் செல்வம் குறையும். காரணமின்றியே பலரையும் சினந்துரைப்பவரிடத்தில் உள்ள செல்வம் பகையினால் அழியும். தன் நிலை அறியாமல் பார்க்கும் பொருளையெல்லாம் …

தேடிய செல்வம் நிலைக்காமல் நீங்கும் காரணங்கள் Read More »

Share

யானை புக்க புலம்

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம் போல, தானும் உண்ணான், உலகமும் கெடுமே. பாடியவர்: பிசிராந்தையார் – புறநானூறு …

யானை புக்க புலம் Read More »

Share

கூடா நட்பு

“கெட்ட நடத்தை உடையவனும்  கபடப் பார்வை கொண்டவனும் நேர்மையற்றவனுமாகிய ஒருவனைத் தனது நண்பனாக்கிக் கொள்பவன் விரைவில் பாழடைந்து போவான்.” – சாணக்கியர் He who befriends a man whose conduct is vicious, whose vision impure, and who is notoriously crooked, is rapidly ruined. -Chanakya

Share
Scroll to Top