புற்றுநோயைக் குணமாக்கும் தாவரங்கள்: 2
புற்றுநோய் நோயாளிகள் பல சமயங்களில் அலோபதியைத் தவிர்த்து, மாற்று சிகிச்சைகளைத் தேடுகின்றனர். குறிப்பாக மூலிகை வைத்தியத்தில் இதற்கான மருந்துகள் உள்ளனவா என்று நோக்குகின்றனர். எஸ்ஸியக் தேநீர் (ESSIAC Tea) என்பது கனடாவில் உருவான, புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு பிரபல மூலிகை சூத்திரம். இதனை உருவாக்கியவரின் பெயர் ரெனெ கெய்ஸ் (Rene Caisse). ரெனெ கெய்ஸ் 1920-களில் நர்ஸ்-ஆக பணிபுரியும் சமயத்தில், ஒரு செவ்விந்திய பழங்குடி மருத்துவரிடமிருந்து புற்றுநோயைக் குணமாக்கும் மருந்தைப் பற்றி அறியவந்ததாக கூறியுள்ளார். எஸ்ஸியக் தேநீர் …