வட கொரியா

வட கொரியா: குவாம் மீதான ஏவுகணைத் தாக்குதல் திட்டம் நிதானம் ஆகியுள்ளது

அமெரிக்காவின் பகுதியான குவாம்க்கு அருகே, ஏவுகணைகளால் தாக்கும்  திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுருப்பதாகத் தெரிகிறது. இத்திட்டம்  பற்றி, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். அமெரிக்கக் கடற்படைத் தளங்களும், ஆகாயப் படைத் தளங்களும் அமைந்திருக்கும் பகுதி, குவாம். குவாமுக்கு அருகில் 4 ஏவுகணைகளைப் பாய்ச்சுவதற்கான விரிவான திட்டம் தொடர்பான விவரங்கள் இம்மாத நடுப்பகுதிக்குள் உறுதிபடுத்தப்படும் என்று வடகொரிய ராணுவம் கடந்த வாரம் கூறியிருந்தது. இத்திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் …

வட கொரியா: குவாம் மீதான ஏவுகணைத் தாக்குதல் திட்டம் நிதானம் ஆகியுள்ளது Read More »

Share

அமெரிக்காவின் பகுதியான குவாமை தாக்க வட கொரியா திட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியாவிற்கு விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, மேற்கு பசிஃபிக் பெருங்கடலிலுள்ள அமெரிக்கப் பகுதியான குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வட கொரியா தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏவுகணைக்குள் பொருத்தக் கூடிய அளவில் அணுவாயுதம் ஒன்றை வெற்றிகரமாக வடகொரியா தயாரித்ததாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு நெருப்புடன் கூடிய கோபத்துடன் பதில் கொடுக்கப்படும்; உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா …

அமெரிக்காவின் பகுதியான குவாமை தாக்க வட கொரியா திட்டம் Read More »

Share

கடுமையான பதிலடி தரப்படும் : வட கொரியா மிரட்டல்; ஆசியன் மாநாட்டில் வ.கொ.விற்கு அதிக அழுத்தம் கொடுக்க பிற நாடுகள் வலியுறுத்தல்

ஐ.நா.வினால் ஒப்புதலளிக்கப்பட்ட வட கொரியாவிற்கான தடைகள் குறித்தான தீர்மானத்திற்கு “ஆயிரம் மடங்கு” அதிகமாக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது. இவ்வறிவிப்பு, ஐ.நா.வினால் வட கொரியாவின் மீது விதிக்கப்பட்ட, 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீதான தடைத் தீர்மானம் நிறைவேறிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. மேற்படி தடைகள் மூலம் வட கொரியாவின் மூன்றில் ஒருபங்கு ஏற்றுமதி வருவாய் பாதிக்கப்படும் என்பது …

கடுமையான பதிலடி தரப்படும் : வட கொரியா மிரட்டல்; ஆசியன் மாநாட்டில் வ.கொ.விற்கு அதிக அழுத்தம் கொடுக்க பிற நாடுகள் வலியுறுத்தல் Read More »

Share

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் நிறைவேற்றம்

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன. இத்தடைகள், வடகொரியா சமீபத்தில் மேற்கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைச் சோதனைகளின் நிமித்தம் அந்நாட்டின் மீது விதிக்கப்படுகின்றன. இத்தடைகள் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது ஏழாவது முறையாக விதிக்கப்படுவன ஆகும். வட கொரியாவின் மீதான இத்தீர்மானம், 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ளது. …

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் நிறைவேற்றம் Read More »

Share

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெறிபிடித்தவர் : ஃபிலிப்பைன்ஸ் அதிபர்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு வெறிபிடித்த முட்டாள் என ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்டே விமர்சித்துள்ளார். மணிலாவில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டுக்கு முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசுகையில், அணு ஆயுதம் போன்ற ஆபத்தான பொம்மைகளுடன் கிம் ஜோங் உன் விளையாடுவதாகவும் அவரின் அணுஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்க போகிறது என்றும்  தெரிவித்துள்ளார். கொழுகொழுவென அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த முட்டாள், அணு ஆயுதப் …

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெறிபிடித்தவர் : ஃபிலிப்பைன்ஸ் அதிபர் Read More »

Share

அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல – ரெக்ஸ் டில்லர்சன்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல என்று கூறினார். வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “நாங்கள் வட கொரியாவின் எதிரிகள் அல்ல… ஆனால் எங்களால் ஒப்புக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் ஒன்றை எங்கள் முன் வைக்கிறீர்கள்; அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது.  அவர்கள் (வட கொரியா) ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எங்களை புரிந்து கொண்டு எங்களுடன் பேசுவதற்கு முன் வருவார்கள் என்று நம்புகிறோம்” என்றார் டில்லர்சன். மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கா, …

அமெரிக்கா, வட கொரியாவிற்கு எதிரியல்ல – ரெக்ஸ் டில்லர்சன் Read More »

Share

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார். வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க …

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா Read More »

Share

வட கொரியா: நாளை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

நாளை மீண்டும் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை பரிசோதிக்க உள்ளதாக அமெரிக்க மற்றும் தென் கொரிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தென்கொரியாவுடன் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை ராணுவ தினமாக வடகொரியா நாளை கொண்டாடுகிறது. அச்சமயத்தில்,  வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென் கொரியா பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. …

வட கொரியா: நாளை மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை Read More »

Share

அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் கோபமூட்டுவதாக வடகொரியா குற்றச்சாட்டு

ஞாயிறன்று வடகொரிய அரசு ஊடகங்கள் அமெரிக்காவின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் தம்மை கோபமூட்டுவதாக வடகொரிய அரசு ஊடகங்கள்  குற்றம் சாட்டின. கொரிய தீபகற்பம் பகுதியை அணு ஆயுத போர் முனையமாக மாற்றிவிட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக, வட கொரிய அரசுக்கு சொந்தமான ‘ரோடாங் சின்முன்’ நாளிதழில் ’வெடி மருந்து பீப்பாய்க்கு அருகே நெருப்போடு விளையாட வேண்டாம்’ என்ற தலைப்பில் இன்று வெளியாகியுள்ள சிறப்பு கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகிலேயே எளிதில் தீப்பற்றக் கூடிய …

அமெரிக்க இராணுவம் பொறுப்பற்ற முறையில் கோபமூட்டுவதாக வடகொரியா குற்றச்சாட்டு Read More »

Share

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனா எதுவும் செய்வதாகத் தெரியவில்லை : டிரம்ப்

வடகொரியா ஏற்படுத்தும் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்ப்பதில் சீனாவுக்குள்ள அக்கறை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் சீனா-வட கொரியா இடையிலான வணிகம் 40 சதவீதம் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப் சீனாவுடன் பேசுவதில் பயனில்லை என்றும் ஆனாலும் முயன்று பார்ப்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்புக் குழு விதித்த தடையை மீறி நடத்தப்பட்டதாகும். பாதுகாப்புக் குழுவை அவசரமாகக் கூட்டி இப்பிரச்சினையை விவாதிக்கவேண்டும் …

வடகொரியாவின் அச்சுறுத்தலை தடுக்க சீனா எதுவும் செய்வதாகத் தெரியவில்லை : டிரம்ப் Read More »

Share
Scroll to Top