ரஷ்யா

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற ரஷ்யாவின் அதிபர் புடின் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது …

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு Read More »

Share

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார். வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க …

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா Read More »

Share

ஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு

ஜி-20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார். ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். வெள்ளியன்று அமெரிக்க …

ஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு Read More »

Share

ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் பாக்தாதி பலியா ?

ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாத குழுவின் தலைவர் பாக்தாதி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு விசாரித்து வருவதாக தெரிகிறது. ஐ.எஸ். அமைப்பினர் அவர்களது கவுன்சில் கூட்டத்தை ரக்காவில் நடத்தும் பொழுது, அதனைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் பாக்தாதி கொல்லப்பட்டாரா என்பதை ரஷ்யாவோ, அமெரிக்காவோ, சிரியாவோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்னரும், அவர் இறந்துவிட்டதாக பல முறை செய்தி வெளியாகியுள்ளது.

Share

குறிப்பிடும்படியான சான்றுகள் எதுவும் இல்லை, எல்லாம் வெறும் ஊகங்களே : அமெரிக்க தேர்தலில் எவ்வித குறுக்கீடும் இல்லையென மறுக்கிறார் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்  ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார். “அதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை” என்றும் கூறினார். தூய பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றுகையில், விளாடிமிர் புடின் கூறியதாவது : ரஷ்ய தலையீடு குறித்த குறிப்பிடும்படியான சான்றுகள் எதுவும் இல்லை, மிஞ்சுவது வெறும் ஊகங்களேயன்றி வேறெதுவும் இல்லை.  இப்பயனற்ற, தீங்கு விளைவிக்கும்  வதந்திகள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் அவர் கூறுகையில் …

குறிப்பிடும்படியான சான்றுகள் எதுவும் இல்லை, எல்லாம் வெறும் ஊகங்களே : அமெரிக்க தேர்தலில் எவ்வித குறுக்கீடும் இல்லையென மறுக்கிறார் புடின் Read More »

Share
Scroll to Top