கத்தார்

கத்தாருக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய 80 நாட்டினருக்கு அனுமதி

இந்தியா உள்ளிட்ட 80 நாட்டினருக்கு விசா இல்லாமல் நாட்டினுள் நுழையும் திட்டம் தொடர்பான அறிவிப்பை கத்தார் வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் கால்பந்தாட்ட உலகக் கோப்பையை நடத்த இருக்கின்ற, எரி வாயு அதிகமாக உற்பத்தி செய்யும், கத்தார் நாட்டிற்கு  ஐரோப்பா, மற்றும் பிற நாடுகளான இந்தியா, லெபனான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்கள்,  இங்கு வந்து சேர்ந்ததும் சுற்றுலா விசாக்களைப் பெறுவார்கள். இந்த விசா விலக்கு திட்டம் கத்தார் நாட்டை அப்பிராந்தியத்தின் …

கத்தாருக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய 80 நாட்டினருக்கு அனுமதி Read More »

Share

கத்தாரின் மீது புதிய தடைகள் இல்லை : எகிப்து

கத்தாரின் பதில் எதிர்மறையானது என்றாலும்  புதிய தடைகள் எதுவும் இல்லை என்று எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமே ஷௌக்ரி கூறும் போது, ” எங்களுக்கு உருப்படியான பதில் கிடைக்கவில்லை; ஒட்டுமொத்தமாக பதில் எதிர்மறையாகவுள்ளது. இப்பதில்கள் கத்தார் தனது கொள்கைகளிலிருந்து பின்வாங்கும் என்ற கருத்திற்கு இடம் தரவில்லை” என்றார். இதனிடையே சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய அரபு நாடுகள் ஒன்று கூடி தங்களின் கெடு முடிந்தப் பிறகு …

கத்தாரின் மீது புதிய தடைகள் இல்லை : எகிப்து Read More »

Share

கத்தாருக்கு அரபு நாடுகள் நிபந்தனை: அல் ஜசீராவை மூடவும் ஈரானுடன் நட்புறவைத் துண்டிக்கவும் வேண்டும்

கத்தாருடனான் முன்பு போல நட்புறவு தொடர பிற அரபு நாடுகளான சவுதி அரேபியா, யூ.ஏ.இ., பஹ்ரேன் மற்றும் எகிப்து ஆகியவை 13 நிபந்தனைகளை விதித்துள்ளனர். அவற்றில் முக்கிய நிபந்தனைகளான அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் நட்புறவைத் துண்டிப்பது ஆகியவையும் அடங்கும். மேலும், முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம், ஐ.எஸ். அமைப்பு, அல் கொய்தா மற்றும் லெபனானின் ஈரானிய ஆதரவிலான ஹிஸ்புல்லா இயக்கம் உள்ளிட்ட குழுக்களுடனான உறவுகளை கத்தார் துண்டிக்கும்படி அரபு நாடுகளின் நிபந்தனை கூறுகிறது. கத்தாரிலிருக்கும், தங்கள் அரசுகளின் …

கத்தாருக்கு அரபு நாடுகள் நிபந்தனை: அல் ஜசீராவை மூடவும் ஈரானுடன் நட்புறவைத் துண்டிக்கவும் வேண்டும் Read More »

Share

ஈத் பண்டிகையின் போது கத்தாரிலுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்கள்

மற்ற வளைகுடா நாடுகளால் பயண மற்றும் வர்த்தக புறக்கணிப்பினால் பாதிக்கப்பட்ட கத்தாரில் வாழும் இந்தியர்கள் ஈத் பண்டிகையின் போது நாடு திரும்புவதற்கு உதவியாக சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. கொச்சி, திருவனந்தபுரம், மும்பை ஆகிய இடங்களிலிருந்து ஏர் இந்தியா மற்றும் தனியார் விமான சேவைகள் தோகாவுக்கு கூடுதலான விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கத்தார் நாட்டில் இந்தியர்கள் இக்கட்டான நிலையில் …

ஈத் பண்டிகையின் போது கத்தாரிலுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்கள் Read More »

Share

கத்தார் குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு, தடை விதித்த அரபு நாடுகள் வரவேற்பு

கத்தார் மீது பிற அரபு நாடுகள் தடை விதித்தபோது, அது குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு, தடை விதித்த அந்நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதனிடையே அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லெர்சன், கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்துமாறு கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு எமிரேட்டுகள் டிரம்ப் இவ்விஷயத்தில் காட்டிய ”தலைமைத்துவத்தை” பாராட்டியிருக்கிறது. கத்தார் ”மற்றவர்களைக் கொல்ல மக்களுக்கு பயிற்சி தருவதை நிறுத்த வேண்டும்” என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். கத்தார் ”மற்ற ஒற்றுமையான நாடுகளின் மத்தியில்” மீண்டும் வரவேண்டும் என்று …

கத்தார் குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு, தடை விதித்த அரபு நாடுகள் வரவேற்பு Read More »

Share

கத்தார் விவகாரம் குறித்த டிரம்பின் ட்வீட் : ‘தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’

‘கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’ என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என …

கத்தார் விவகாரம் குறித்த டிரம்பின் ட்வீட் : ‘தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்’ Read More »

Share
Scroll to Top