பாக்கிஸ்தான்

பாகிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமனம்

பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷாகித் ககான் அப்பாஸியின் 47 பேர் கொண்ட அமைச்சரவையில்  65 வயதான தர்ஷன் லால் என்பவர் அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.  இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் ஒரு இந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சிந்து மாகாணத்தில் மிர்புர் மாதெல்லோ எனும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  தர்ஷன் லால். இவர்  மருத்துவராக பணியாற்றியவர். 2013 ஆம் ஆண்டில் சிறுபான்மையிருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து பாகிஸ்தானின் தேசிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் நவாஸ் ஷெரீஃப் கட்சியான …

பாகிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமனம் Read More »

Share

பாகிஸ்தானில் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விலகினார். அவருக்குப் பதிலாக, பாகிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக ஷாகித் காகான் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நவாஸ் ஷெரீஃபின் தம்பியும்  பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீஃப்பை பிரதமராக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு முன்னதாக இருந்தது. ஷாபாஸ் ஷெரீஃப் தற்போது பாராளுமன்ர உறுப்பினராக இல்லையென்பதால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.ஆக வேண்டும். ஆகவே, அதுவரை இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று, …

பாகிஸ்தானில் புதிய பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு Read More »

Share

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பாகிஸ்தான் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியது குறித்த பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் தகவல்கள் அம்பலமானதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மீது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நவாஷ் ஷெரீஃப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் உலகளவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் செய்துள்ள ஊழல் குறித்த தகவல் அம்பலமானது. இதில் லண்டனில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்துள்ளதாக பனாமா ஆவணங்களில் தகவல் வெளியானது. சர்ச்சயைில் …

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பாகிஸ்தான் பிரதமர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் Read More »

Share

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும் என்று அமெரிக்க பாராளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின், ஒதுக்கீட்டுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில், 2018-ம் ஆண்டுக்கான மாகாணம் மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டது. இம்மசோதவின்படி அவர் பாகிஸ்தானுக்கு நிதி …

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும் Read More »

Share

பாகிஸ்தானில் எண்ணெய் லாரி கவிழ்ந்து தீ பிடித்து எரிந்ததில் 148 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பகாவல்பூரில்,  நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தத்தில் 148 பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து எண்ணெய் சேகரிக்க வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. டேங்கர் லாரி வேகமாக நெடுஞ்சாலையில் ஒரு வளைவில் ஓடியபோது, டயர் ஒன்று தீ பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனைப் பார்ப்பதற்கும் கவிழ்ந்த லாரியிலிருந்து எண்ணெய் சேகரிக்கவும் பெருங்கூட்டமாக அருகிலிருந்து வந்த மக்கள் கூடினர். கவிழ்ந்த 45 நிமிடங்களுக்குப் பின் …

பாகிஸ்தானில் எண்ணெய் லாரி கவிழ்ந்து தீ பிடித்து எரிந்ததில் 148 பேர் பலி Read More »

Share

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் காஷ்மீர் மக்கள் பீதி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லையில் விதிமுறைகளை மதிக்காமல் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர்.  பாகிஸ்தான்  ராணுவம் அத்துமீறல் இன்றும் தொடர்வதால் ரஜோரி மாவட்டத்தில் உள்ள மஞ்சகோட் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.பாகிஸ்தான் ராணுவத்தில் தொடர் தாக்குததால் எல்லையோர கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Share

பாகிஸ்தான் 2 ஆண்டுகளில் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது

புதுடெல்லி: போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதை பாகிஸ்தான் தினசரி வாடிக்கையாக வைத்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் 405 முறையும், 2016-ம் ஆண்டில் 449 முறையும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் தரப்பில் இருந்து 1142 தீவிரவாத சம்பவங்கள் நடத்தப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் 236 பேரும், பொதுமக்கள் 90 பேரும் உயிரிழந்தன. இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 507 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அத்துமீறல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்படும் போது சமூக ஊடகங்களில் தகவல் பரவி பாதுகாப்பு படையினரை பொதுமக்கள் சூழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதனால் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

Share
Scroll to Top