தென் கொரியா

தென் கொரியாவின் புதிய அதிபராக மூன் ஜே பதவியேற்பு

தென் கொரியாவின் புதிய அதிபராக  மூன் ஜே  பதவியேற்று கொண்டார். அதிபராக அவர் ஆற்றிய முதல் உரையில், வட கொரியாவுடனான பொருளாதார மற்றும் உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மூன் ஜே தீர்க்கமான வெற்றியை பெற்றதையடுத்து அதற்கு மறுநாள் சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற கட்டட அலுவலகத்தில் தனது பதவிப்பிரமாணத்தை எடுத்துள்ளார். முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞரான மூன் ஜே, வட கொரிய அகதிகளின் மகன் ஆவார்.

Share

வடகொரியாவுடன் நட்புறவை விரும்பும் தலைவர் தென் கொரியாவின் புதிய அதிபராவாரா ?

வடகொரியாவுடன் நட்புக்கரம் நீட்ட விரும்பும் மூன் ஜயே-இனனை தென் கொரிய வாக்காளர்கள் அடுத்த அதிபராக ஒருமனதாக தெரிவு செய்யக்கூடும் என வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. மூன் 41.4 சதவீத வாக்குகள் பெறுவார் என்றும் அவரது போட்டியாளர் ஹொங் ஜூன்-பியோ 23.3 சதவீதமே பெறுவார் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய தென் கொரிய கொள்கைக்கு மாறாக, வட கொரியாவோடு அதிக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மூன் கொண்டுள்ளார். தற்போதைய தென் கொரிய கொள்கைக்கு …

வடகொரியாவுடன் நட்புறவை விரும்பும் தலைவர் தென் கொரியாவின் புதிய அதிபராவாரா ? Read More »

Share

வடகொரிய ஏவுகணைகளை அழிக்க இயங்கத் துவங்கியது அமெரிக்காவின் `தாட்” தடுப்பு முறை

(பி.பி.சி. தமிழ்) தென் கொரியாவில் சர்ச்சைக்குரிய தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு முழுமையாக செயல்பட இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றாலும் இது வடகொரியாவின் ஏவுகணைகளை இடைமறிக்கும் என்று கூறப்படுகிறது. வடகொரியாவின் இருந்து வரும் தொடர் அச்சுறுதல்கள் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் இருப்பு காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது. சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளுக்கு வட கொரியா கோபமாக …

வடகொரிய ஏவுகணைகளை அழிக்க இயங்கத் துவங்கியது அமெரிக்காவின் `தாட்” தடுப்பு முறை Read More »

Share

தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா

தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கான செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது தென் கொரியாவில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு கேடயம், வட கொரியாவில் இருந்து …

தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா Read More »

Share
Scroll to Top