லண்டன்

லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது

லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவர் பெயர், டெரன் ஆஸ்பர்ன் என்றும், கார்டிஃபைச் சேர்ந்த அவரது வயது 47 என்றும் தெரியவந்துள்ளது. வடக்கு லண்டனில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடியிருந்த இஸ்லாமியர்கள் மீது ஒரு வேன் மோதப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் எல்லா வகையான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தையும் ஒடுக்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்தார்.  இது இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிகிறது …

லண்டன் மசூதியினருகில் தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது Read More »

Share

லண்டன் தீ விபத்தில் இதுவரை 58 பேர் பலி

லண்டனிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது என்று போலிஸார் கூறினர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று போலிஸ் அதிகாரி ஸ்டுவர்ட் கண்டி தெரிவித்தார். பிரிட்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது பிறந்த நாளைக் குறித்த ஒரு அறிக்கையில் கூறியதாவது : நாட்டின் மிக துக்கமான மனநிலையை மறப்பதற்குக் கடினமாக உள்ளது. சமீபத்திய மாதங்களில் நமது நாடு பயங்கரமான துயரங்களை தொடர்ந்து கண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்குள் லண்டனிலும் மான்செஸ்டரிலும் நடந்த …

லண்டன் தீ விபத்தில் இதுவரை 58 பேர் பலி Read More »

Share

லண்டன் அடுக்கு மாடி கட்டிட தீ விபத்து: சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்வு

லண்டனில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தீ விபத்தில் காயமடைந்த 79 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு லண்டனில்   அமைந்துள்ள கிரென்பெல் டவர் என்ற 24 மாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பல மணிநேரமாக தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். …

லண்டன் அடுக்கு மாடி கட்டிட தீ விபத்து: சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்வு Read More »

Share

லண்டன் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து: பலர் இறந்தனர்

மேற்கு லண்டன் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. அந்த கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிகிச்சை பெறும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் …

லண்டன் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து: பலர் இறந்தனர் Read More »

Share

லண்டன் தாக்குதல்: குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன

லண்டனில் மூன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியா தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் உள்ள பாலத்தில் தீவிரவாதிகள் நடத்திய வேன் தாக்குதல் மற்றும் ஆயுதங்கள் வைத்து நடத்திய தாக்குதலில் 7-பேர் பலியாகியுள்ளனர். 48-பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்நிலையில் லண்டன் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒருவரின் பெயர் குரம் ஷசாட் பட் …

லண்டன் தாக்குதல்: குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன Read More »

Share

லண்டன் பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் பலி : 12 பேர் கைது

லண்டன் பாலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்; பயங்கரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதலுக்குப் பிறகு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகளின் கூட்டத்துக்குள் புகுந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று தாக்குதல்தாரிகளில் ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர் பார்கிங், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் …

லண்டன் பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் பலி : 12 பேர் கைது Read More »

Share

லண்டனில் தாக்குதல்கள்: லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது வேன் மோதியது; அருகில் கத்திக்குத்து

மத்திய லண்டனில், ஒரு வாகனம் பாதசாரிகள் மீது மோதியது மற்றும் கத்திக்குத்து சம்பந்தப்பட்ட மற்றொரு சம்பவத்திற்குப் பின்னர் ஒன்றுக்கும் அதிகமான நபர்கள் மரணம் அடைந்தனர் என்றும் 20 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தெரசா மே இச்சம்பவம் பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றார். ஆயுதம் தாங்கிய போலீசார் தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். வாக்ஸ்ஹால் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.  மேலும் அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் அவர்கள் மற்றொரு தாக்குதல் சம்பவத்தையும் …

லண்டனில் தாக்குதல்கள்: லண்டன் பாலத்தில் பாதசாரிகள் மீது வேன் மோதியது; அருகில் கத்திக்குத்து Read More »

Share

விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதில் என்ன சிக்கல்?

பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் மல்லையாவை லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தது. பின்னர், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. தற்போது செயலிழந்த நிலையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமானச் சேவை நிறுவனத்தில் நடந்த நிதி மோசடிகள் தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மேலும் இந்திய வங்கிகளிடம் இருந்து பெற்ற 9000 கோடி ரூபாய் கடனை செலுத்த தவறிய குற்றச்சாட்டும் மல்லையாவின் மீது இருந்தது. நீதிமன்றங்களில் இவை தொடர்பான …

விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதில் என்ன சிக்கல்? Read More »

Share
Scroll to Top