அமெரிக்கா

எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே : செனட் அங்கீகரித்தது

அமெரிக்காவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. -யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு  செனட் சபை  ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி பதவி வகித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யாவுக்கும் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரக் குழுவுக்கும் இடையில் ரகசிய தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜேம்ஸ் கோமி தீவிர விசாரணையில் இறங்கினார். இந்நிலையில், கடந்த மாதம் 10-ம் …

எஃப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக கிறிஸ்டோபர் வ்ரே : செனட் அங்கீகரித்தது Read More »

Share

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 11 நாட்கள் பதவி வகித்த அந்தோனி ஸ்காரமுக்கி பணிநீக்கம்

வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் நிகழும் உள்கட்சி மோதல்களைத் தவிர்த்து, ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்காக, புதிதாக அலுவலர்களின் மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜான் கெல்லி, கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு இயக்குநராக  பதவி வகிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த அந்தோனி ஸ்காரமுக்கியை பணிநீக்கம் செய்துள்ளார். இது ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சியின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் ஊடகவியல் செயலாளரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், கெல்லிதான் ஸ்காரமுக்கியை பணி நீக்கம் செய்யக் கோரினார் என்பதை …

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 11 நாட்கள் பதவி வகித்த அந்தோனி ஸ்காரமுக்கி பணிநீக்கம் Read More »

Share

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை சிறிது நேரம் முந்திய அமேசான் நிறுவனர்

நேற்று (வியாழக்கிழமை) சிறிது நேரத்திற்கு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான ஜெஃப் பெசோஸ்  உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பின்னர், பில்கேட்ஸ் மீண்டும் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை தக்கவைத்துக் கொண்டார். ஜெஃப் பெசோஸின்  சொத்து மதிப்பு சுமார் 91.4 பில்லியன் டாலர்களாக இருந்தது. பின்னர், அமேசான் நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவை சந்தித்த காரணத்தால் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் வகித்த முதல் இடம் பறிபோனது. தொடர்ந்து, அந்த இடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் …

உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை சிறிது நேரம் முந்திய அமேசான் நிறுவனர் Read More »

Share

வடகொரியா விவகாரம்: அமெரிக்காவுடன் இணைந்து செயல்படபோவதாக சீனா சொல்கிறது

வடகொரிய அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப் போவதாக சீனா அறிவித்துள்ளது. ஆசிய நாடான வடகொரியா தனது எதிரியான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு 2 நாட்கள் நடந்தது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் இருவரும் …

வடகொரியா விவகாரம்: அமெரிக்காவுடன் இணைந்து செயல்படபோவதாக சீனா சொல்கிறது Read More »

Share

ஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு

ஜி-20 உச்சி மாநாட்டின்போது முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பரிமாறி கொண்டார். ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். வெள்ளியன்று அமெரிக்க …

ஜி-20 : டிரம்ப் – புடின் முதல்முறையாக சந்திப்பு Read More »

Share

வடகொரியா சோதனை எதிரொலி: ஐ.நா. அவசரக் கூட்டம்; அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சி

வடகொரியா நேற்று மேற்கொண்ட கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையின் எதிரொலியாக ஐ.நா. அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சியை மேற்கொள்கின்றனர். ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் ஒரு குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. அதன் தலைவராக கிம் ஜாங் அன் பதவி வகித்து வருகிறார். அதன் அண்டை நாடான தென்கொரியாவில் பாதுகாப்புக்காக அமெரிக்கப் படைத்தளமும், படைவீரர்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அணுகுண்டு சோதனை, …

வடகொரியா சோதனை எதிரொலி: ஐ.நா. அவசரக் கூட்டம்; அமெரிக்க, தென் கொரிய படைகள் ஏவுகணையை எதிர்கொள்ளும் பயிற்சி Read More »

Share

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி

இன்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர்  மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிரதிநிதித்துவ-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தியபின், “பயங்கரவாதத்தை ஒழிப்பதே இரு நாடுகளுக்கும் அதி முக்கியமான முன்னுரிமையாகும்”, என்றார். பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் பற்றி …

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி Read More »

Share

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது

திங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர்  டிரம்ப் அறிவித்த, ஆறு பெரும்பான்மை முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத் தடை ஏற்படுத்தும் உத்தரவின் முக்கிய பாகங்களை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது. இது குறித்தான முழு வாதங்களையும் இலையுதிர் காலத்திலிருந்து (அக்டோபர் மாதம்) கேட்கப்படும் என்றும் கூறியது. இது அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப் படுகிறது. முன்னதாக, டிரம்பின் இப்பயணத் தடை உத்தரவுகள் 9 வது சுற்று நீதிமன்றங்களினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன. தீர்ப்பில், “ஒரு நற்பெயர் கொண்ட …

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது Read More »

Share

நியூயார்க் விசா மீறல் வழக்கில் இன்ஃபோசிஸ் $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம்

நியூயார்க் மாகாண அட்டார்ணி ஜெனரல் எரிக் ஸ்னைடர்மேனுடன் இந்தியாவின் இன்ஃபோசிஸ்,  விசா மீறல் வழக்கில்  $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது. இத்தீர்வு இன்போசிஸ், அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் போக்கில், நியூயார்க் மாகாணத்திற்கு வெளிநாட்டு ஐடி பணியாளர்களை கொண்டுவந்து, தங்கள் விசாக்களின் விதிமுறைகளை மீறி பணியாற்றச் செய்ததாக அம்பலமான கூற்றுக்களை நிவர்த்தி செய்கிறது. அட்டார்ணி ஜெனரல் மேலும், “இன்போசிஸ் நியூயார்க்கில் உள்ள அவர்களது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுவாக நடைமுறையில் உள்ள ஊதியம் வழங்காமலும்,  வரி …

நியூயார்க் விசா மீறல் வழக்கில் இன்ஃபோசிஸ் $ 1 மில்லியன் அபராதம் செலுத்த சம்மதம் Read More »

Share

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர் ஓட்டோ மரணம் : வ.கொ. அரசுக்கு டிரம்ப் கண்டனம்

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் சென்ற வாரம் விடுவிக்கப்பட்ட 22 வயது மாணவர் ஓட்டோ வார்ம்பியர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியாவில் கொடுங்கோலாட்சி நடக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார்.  இன்று வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது : பல கெட்ட காரியங்கள் நடந்துள்ளன. ஆயினும் நாம் அவரை அவருடைய  பெற்றோருடன் சேர்த்துவைக்கும் அளவாவது முடிந்தது. அது ஒரு மிருகத்தனமான ஆட்சி. ஆயினும் நாம்மால் அதை கையாள …

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர் ஓட்டோ மரணம் : வ.கொ. அரசுக்கு டிரம்ப் கண்டனம் Read More »

Share
Scroll to Top