இலங்கை

யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு

இலங்கை, வடக்கு  மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முக்கிய தமிழ் நீதிபதியாக உள்ளவர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன். இவர் மிகவும் தைரியமான நீதிபதி என்று பெயர் பெற்றவர். நல்லூர் பின்வீதி வழியாக தனது மெய்ப்பாதுகாவலருடன்  நீதிபதி இளஞ்செழியன் தனது காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது,  அவரது கார் நாற்சந்தியை வந்தடைந்தபோது, அதற்கு வழிவிடும் வகையில், மோட்டர்சைக்கிளில் வந்த  மற்றொரு மெய்ப்பாதுகாவலர்,  வாகனங்களை மறித்து வழியேற்படுத்தினார். அப்போது, அந்த இடத்தில்  வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த …

யாழ்ப்பாணம்: தமிழ் நீதிபதி கார் மீது துப்பாக்கிச் சூடு Read More »

Share

இறுதிகட்ட போரின் போது காணாமல் போனவர்கள் விவகாரம்: கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது

இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காணாமல் போயினர். இது குறித்து சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் முன்னாள் அதிபர் ராஜபக்சே அமைத்த குழுவினரே, காணாமல் போனவர்கள் பற்றி 19 ஆயிரம் வழக்குகள் உள்ளதாக அறிக்கை அளித்து இருந்தனர். இதில் குறிப்பிட்ட 11 பேர் காணாமல் போனதில் தொடர்பு உடையதாக முன்னாள் கடற்படை செய்தி தொடர்பாளர் தளபதி தசநாயகே உள்பட 7 அதிகாரிகள் மீது புகார் …

இறுதிகட்ட போரின் போது காணாமல் போனவர்கள் விவகாரம்: கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது Read More »

Share

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச்செல்லும் படகுகளையும், மீனவர்களையும் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச்செல்வது தொடர்ந்து நடந்துவருகிறது. கடந்த சில நாட்களில் 60 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 161 படகுகளும் பிடித்துச்செல்லப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, அவ்வப்போது, தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு, படகுகளை மட்டும் விடுவிப்பதில்லை. இந்நிலையில், எல்லைதாண்டி வரும் படகுகளுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதிக்கவும், மீனவர்களுக்கும் அபராதம் விதிக்கவும் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் …

தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு Read More »

Share

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, மீனவர் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பாரம்பரியமாக பாக்ஜலசந்தியில் …

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி Read More »

Share

இலங்கை: பாதுகாப்புத்துறை செயலராக ஜெனரல் கபில வைத்திய ரத்னம் நியமனம்

இலங்கை பாதுகாப்புச் செயலர்,  ஜனாதிபதி  செயலாளர் மற்றும் புதிய இராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளை இலங்கை அரசு நியமித்துள்ளது. இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாதுகாப்புத்துறை செயலராக ஜெனரல் கபில வைத்தியரத்னம், ராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் மகேஷ்சேனாநாயக்க,  ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து  கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் மந்திரி ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

Share

இலங்கையில் பணி புறக்கணிப்பு போராட்டம்: தபால் சேவை முடக்கம்

இலங்கையில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணி புறக்கணிப்பு போராட்டத்தினால் தபால் சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஐந்து லட்சத்திட்கும் மேற்பட்ட தபால்கள் மற்றும் பொதிகள் விநியோகிக்க முடியாமல் தேங்கியுள்ளன. தபால் திணைக்களத்தின் தொழிற்சங்க ஒன்றியத்தின் செயலாளர் சிந்தக்க பண்டார இதனை தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக தபால் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, 653 தபால் காரியாலயங்கள் மற்றும் 3,410 கிளை தபால் அலுவலகங்களின் சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

சரணடைந்த பொது பல சேனாவின் பொது செயலாளரான ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை

நீதிமன்றத்தில் சரணடைந்த பௌத்த அமைப்பான பொது பல சேனாவின் பொது செயலாளரான ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி, ஜாதிக பல சேன அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்தமை மற்றும் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி கொம்பனி தெரு போலிஸ் நிலையம் முன்பாக இடம் பெற்ற பத்திரிகையாளார்கள் சந்திப்பில் இஸ்லாத்தையும் அல் குர் ஆனையும் அவமதித்தும் நிந்தித்தும் கருத்து வெளியிட்டமை தொடர்பாக கொழும்பு …

சரணடைந்த பொது பல சேனாவின் பொது செயலாளரான ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை Read More »

Share

முதல்வர் பதவியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கப்படமாட்டார் : டிஎன்ஏ மூத்த தலைவர்

முதல்வர் பதவியில் விக்னேஸ்வரன் நீடிப்பார் என்று இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ.) மூத்த தலைவர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக அறியப்படுகிறது. அமைச்சர்கள் மீது ஊழல் புகார் குறித்து விசாரிப்பதற்காக முதல்வர் விக்னேஸ்வரன் அமைத்த குழு கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கையில் 2 அமைச்சர்கள் மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வேளாண் அமைச்சர் பி.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் டி.குருகுலராஜா ஆகிய இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.  இதனால் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமாறு ஆளுநரிடம் …

முதல்வர் பதவியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரன் நீக்கப்படமாட்டார் : டிஎன்ஏ மூத்த தலைவர் Read More »

Share

இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும் : அதிபர் சிறிசேனா

இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், கடந்த 2009ம் ஆண்டு, மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்த போது முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப் போரில், பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச தமிழ் சமூகத்தினர் வீடியோ ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.இறுதிக்கட்டப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும், …

இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும் : அதிபர் சிறிசேனா Read More »

Share

பொதுவாக்கெடுப்பே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு: ஸ்டாலின்

ஈழத்தமிழர் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையருக்கு திமுக செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ அரசியல் தீர்வு நிச்சயம் தேவை என்றும் அரசியல் தீர்வை ஏற்படுத்த பொது வாக்கெடுப்பால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு ஐ.நா. மனிதஉரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

Share
Scroll to Top