மகாராஷ்ட்ரா

வெளிநாட்டில் இருந்து மகன் திரும்பியபோது எலும்புக்கூடாக தாய்

மும்பையின் அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயதான ஆஷா சஹானி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த கட்டிடத்திலுள்ள 10 – வது மாடியிலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களில் ஒன்றில் வசித்து வந்தார். அந்த தளத்திலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களும் சஹானி குடும்பத்தினருக்குச் சொந்தமானதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு அடிக்கடி செல்வதில்லை எனத் தெரிகிறது. ஆஷாவின் மகன் ரிதுராஜ் சஹானி, அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாயை பார்ப்பதற்காக நேற்று மும்பை வந்துள்ளார். வீட்டிற்கு வந்த …

வெளிநாட்டில் இருந்து மகன் திரும்பியபோது எலும்புக்கூடாக தாய் Read More »

Share

முகேஷ் அம்பானி வீட்டில் தீ விபத்து

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மும்பை அல்டாமவுண்ட் சாலையில் உள்ள 27 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். உலகிலேயே விலையுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில், தியேட்டர், நீச்சல் குளம் உள்பட சகல வசதிகளும் காணப்படுகின்றன. இதன் 6–வது மாடியில் முகேஷ் அம்பானி தோட்டம் அமைத்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு 9.10 மணிக்கு இந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், 6–வது மாடியில் …

முகேஷ் அம்பானி வீட்டில் தீ விபத்து Read More »

Share

மாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மாட்டுக்கறி கொண்டுசென்றதாக ஜூனைத் கான் என்ற சிறுவன், டெல்லியில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ரமதான் சமயத்தில் , ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக கூறி இஸ்லாமியச் சிறுவர்கள் மீது பசுபாதுகாப்பு பயங்கரவாதிகள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். அதில், ஜுனைத் கான் என்ற 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜூனைத் கான் கொலைவழக்கில் தொடர்புடைய …

மாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது Read More »

Share

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்டு: மும்பை கோர்ட்டு உத்தரவு

தொழில் அதிபர் விஜய் மல்லையா 17 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக்கொண்டு லண்டனில் குடியேறிவிட்டார். இதில், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.750 கோடிக்கும் மேற்பட்ட கடனும் அடங்கும். இதுபற்றி அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, சமீபத்தில் மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விஜய் மல்லையா மீதான இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு …

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்டு: மும்பை கோர்ட்டு உத்தரவு Read More »

Share

1993 மும்பை குண்டுவெடிப்புகள் : 6 பேருக்கு தண்டனை, ஒருவர் விடுதலை

மும்பையில் 1993-ல்  12 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டதுடன் 713 பேர் படுகாயம் அடைந்தனர்.  இச்சம்பவம் நடந்து 24 ஆண்டுகளுக்குப் பின் இதனைக் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட (TADA) நீதிமன்றம், தீர்ப்பு வழங்கி இருக்கிறது. தீர்ப்பின்படி மும்பை தாதாக்களான முஸ்தபா டோசா மற்றும் அபு சலீம் ஆகியோரும், ஃபிரோஸ் அப்துல் ரஷீத் கான், கரீம்ல்லா கான், தஹிர் மர்ச்சன்ட் மற்றும் ரியாஸ் சித்திக் ஆகியோருடன் …

1993 மும்பை குண்டுவெடிப்புகள் : 6 பேருக்கு தண்டனை, ஒருவர் விடுதலை Read More »

Share

மகாராஷ்ட்ரா : முதல்வர் பட்நாவிஸ் சென்ற விமானம் விபத்து; மயிரிழையில் உயிர் தப்பினார்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பயணம்செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில்  முதல்வர் பட்நாவிஸ் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று லத்தூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார். லத்தூர் அருகே சென்றபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது.  முதல்வருடன் ஐந்துபேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய  அனைவரும் காயங்களின்றி உயிர்பிழைத்துள்ளனர். பின்னர் …

மகாராஷ்ட்ரா : முதல்வர் பட்நாவிஸ் சென்ற விமானம் விபத்து; மயிரிழையில் உயிர் தப்பினார் Read More »

Share
Scroll to Top