கேரளா

கேரள மருத்துவமனைகளால் அவசர சிகிச்சை கொடுக்கப்படாமல் அலைகழிக்கப்பட்ட தமிழர் மரணம்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்களில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இவர் ஆம்புலன்சில் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு செயற்கை சுவாசம் அளிக்கும் சிகிச்சை வசதி இல்லாததால், முருகனை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 50 கி.மீ., தொலைவில் உள்ள திருவனந்தபுரம் மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு இரண்டு மணி நேரம் காக்க …

கேரள மருத்துவமனைகளால் அவசர சிகிச்சை கொடுக்கப்படாமல் அலைகழிக்கப்பட்ட தமிழர் மரணம் Read More »

Share

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை

குளச்சல் போரில் திருவிதாங்கூர் படைகள் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெற்றி பெற்றதன் நினைவு தினம் வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது.  இப்போரின் வரலாற்றை கேரளாவை போல், தமிழகத்திலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவிதாங்கூர் அரசின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் படி, பதினெட்டாம் நூற்றாண்டில், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அக்காலத்தைய தெற்கு கேரளமும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளும், சிறு சிறு சமஸ்தானங்களாக சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தன. …

குளச்சல் போரின் வரலாற்றை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க கோரிக்கை Read More »

Share

நடிகை பாவனா கடத்தல் : நடிகர் திலீப்பிடம் விசாரணை; காவ்யா மாதவன் நிறுவனத்தில் சோதனை

நடிகை பாவனா கடத்தல் வழக்கை போலீசார் மிகவும் தீவிரமாக நடிகர் திலீப், நதிர்ஷா ஆகியோரிடம்  விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்டிருக்கும் பல்சர் சுனிலிடம் இருந்து நடிகர் திலீப்பிற்கு கடிதம் வந்ததையடுத்து போலீசார் நடிகரிடம் 13 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் காக்கநாட்டில் நடிகர் திலீப்பின் 2வது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆன்லைன் ஆடை நிறுவனம் இருப்பது தெரியவந்தது. அதனால் அந்த ஆடை நிறுவனத்தை போலீசார் கடந்த சில …

நடிகை பாவனா கடத்தல் : நடிகர் திலீப்பிடம் விசாரணை; காவ்யா மாதவன் நிறுவனத்தில் சோதனை Read More »

Share

மோடியின் மாடு விற்பனை தடையை எதிர்த்து கேரளாவின் பல இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம்

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது. முஸ்லீம் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பெருமளவு மக்களால், மாட்டுக்கறி உண்ணப்படுகிறது. விலை மலிவு என்பதோடு, அதிக சத்தானபொருள் என்பதால், இதனை அடித்தட்டு மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் உண்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென மாடுகளை இறைச்சிக்காக விற்கவும், கொல்லவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு …

மோடியின் மாடு விற்பனை தடையை எதிர்த்து கேரளாவின் பல இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் Read More »

Share

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

இந்தியாவின் கேரள மாநிலத்தில், பல ஆண்டுகளாக இந்துமத சாமியார் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறி, அவரது ஆணுறுப்பை வெட்டினார் ஆத்திரமடைந்த 23 வயது இளம் பெண். பாதிப்புக்குள்ளான பெண்ணின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆணுறுப்பை வெட்டியது என்பது ஓர் அசாத்தியமான மற்றும் தைரியமான செயல் என்று கூறியுள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சந்தேக நபரின் பெயர் கங்கேஷானந்தா தீர்த்தபடா என்றும், அவர் உடல்நலமின்றி அவதிப்பட்டு வரும் அப்பெண்ணின் தந்தைக்கு பிரார்த்தனை சடங்குகளை …

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண் Read More »

Share

நீட் தேர்வில் உள்ளாடையை அகற்றச் சொன்னது ஒருசிலரின் தனிப்பட்ட ஆர்வமிகுதியாலாம்

கேரளாவின் கன்னூர் பள்ளி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச் சொன்னதாக, கண்காணிப்பாளர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு உத்தரவிட்டது யாரோ சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியின் விளைவு என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும், மே 7ஆம் தேதியன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் …

நீட் தேர்வில் உள்ளாடையை அகற்றச் சொன்னது ஒருசிலரின் தனிப்பட்ட ஆர்வமிகுதியாலாம் Read More »

Share
Scroll to Top