கர்நாடகா

ஆதார் தகவல்கள் திருட்டு : பெங்களூரு மென்பொருள் பொறியாளர் கைது

40 ஆயிரம் பேரின் ஆதார் தகவல்களை திருடியதாக ஓலா நிறுவனத்தின் பணியாற்றிய, காரக்பூர் ஐஐடி – யில் படித்த, 31 வயது பெங்களூரு மென்பொருள் பொறியாளர் அபினவ் ஸ்ரீவத்சவை (Abhinav Srivastav) பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இவர் ஆதார் தகவல்களை சட்ட விரோதமாக கையாடல் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவரை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசின் தனிநபர் அடையாள ஆணைய சர்வரை முடக்கி தகவல்களை …

ஆதார் தகவல்கள் திருட்டு : பெங்களூரு மென்பொருள் பொறியாளர் கைது Read More »

Share

பெங்களூரு மெட்ரோவில் இந்தியில் பெயர்ப்பலகை கூடாது : முதல்வர் சித்தராமையா

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதற்கு எதிராக கன்னட அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர்ப்பலகை வைக்கலாகாது என எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் கன்னட அமைப்பினர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி பெயர்ப்பலகைகளை தார் பூசி அழித்தனர். மேலும் மெட்ரோ வில் பணியாற்றும் இந்தி பேசும் அதிகாரியை இடமாற்றம் செய்யக் கோரியும் போர்க்கொடி …

பெங்களூரு மெட்ரோவில் இந்தியில் பெயர்ப்பலகை கூடாது : முதல்வர் சித்தராமையா Read More »

Share

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரில் தஞ்சம், 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

குஜராத்தில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளனர். குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.  அங்கு பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் மூன்று பேர் பா.ஜ.க.வி. இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக …

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரில் தஞ்சம், 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா Read More »

Share

டிஐஜி ரூபாவிடம் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ்

பெங்களூரு சிறையில் முறைகேடு பற்றிய புகார்களை கூறிய டிஐஜி ரூபாவிடம் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் விவகாரத்தை,  டிஐஜி ரூபா அம்பலப்படுத்தி இருந்தார். இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவின்பேரில், உயர்மட்ட குழு விசாரணை நடத்த தொடங்கியது. …

டிஐஜி ரூபாவிடம் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் Read More »

Share

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மத்திய அரசுக்கு முன்பே தெரியும் ?

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம், பணப் பரிமாற்றத்தின் மூலம் மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று தெரியவந்துள்ளது. அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்று, ஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது அம்பலமாகி உள்ளது. 5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் …

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மத்திய அரசுக்கு முன்பே தெரியும் ? Read More »

Share

கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பூர்வமாக தனிக்கொடி அமைக்க ஆய்வுக்குழு நியமனம்

கர்நாடக மாநிலத்திற்கென சட்டப்பூர்வமாக தனிக்கொடி அமைக்க ஆய்வுக்குழு அங்கு ஆழும் காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்மையில் கர்நாடகாவில் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தைத்  தொடர்ந்து  கர்நாடகாவிற்கென தனிக்கொடி அமைக்க வேண்டும் என கன்னட அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.  இந்நிலையில் இது தொடர்பாக அம்மாநில ஆளுநரின் ஒப்புதலுடன் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்திய அரசியலமைப்பு …

கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பூர்வமாக தனிக்கொடி அமைக்க ஆய்வுக்குழு நியமனம் Read More »

Share

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம்

திங்கள்கிழமையன்று கர்நாடக அரசு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா டி மூட்கிலை வேறு துறைக்கு மாற்றியது. அண்மையில் அவர், அ.இ.அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா  ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததன் மூலம் பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் தனிச் சலுகைகள் பெற்றார் என்று கூறியிருந்தார். ரூபா மூட்கில் தற்போது பெங்களூருவின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு  பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் கமிஷனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். ரூபா அளித்திருந்த அறிக்கையில்,  சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட …

மூத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக புகாரளித்த டி.ஐ.ஜி.ரூபா வேறு துறைக்கு மாற்றம் Read More »

Share

டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு நோட்டீஸ்

பெங்களூர் பரப்பன அக்ஹாரா சிறையில் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றியும், அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு , 2 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறிய பெண் டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, டிஐஜி ரூபாவின் செயல் விதிமுறைகளுக்கு மாறானது எனவும், துறை ரீதியான விவகாரங்களை ஊடகங்களில் வெளிப்படையாக தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் குறிப்பிட்டார். பொதுவெளியில் …

டிஐஜி ரூபாவிற்கு கர்நாடக அரசு நோட்டீஸ் Read More »

Share

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார்

இந்தியாவிலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார். இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ.  விஷால் சிக்கா பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் சமீபத்திய செய்தி ஊடக சந்திப்பின்போது அதனை அறிமுகப்படுத்தினார். இவ்வாகனம் இன்ஃபோஸிஸின் மைசூர் வளாகத்தில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) போன்ற வளர்ந்து வரும்  தொழில்நுட்ப துறைகளில்  ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த மாதிரியான வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்சார் வரிசைகள் பொருத்தப்பட்ட, ஓட்டுநர் …

இந்தியாவின் முதல் டிரைவர்லெஸ் வாகனத்தை இன்ஃபோஸிஸ் சி.இ.ஓ. விஷால் சிக்கா அறிமுகப்படுத்தினார் Read More »

Share

பெங்களூரு நகரின் முழுமையான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

பெங்களூரு நகரின் முழுமையான புதிய மெட்ரோ ரயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கட்டுமானம் 10 ஆண்டுகளுக்கு முன்  தொடங்கப்பட்டது. நகரில் உள்ள 4 திசைகளையும் இணைக்கும் வகையில் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு திசைகளில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது 18.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிழக்கு-மேற்கு திசையில் பையப்பனஹள்ளி-நாயண்டஹள்ளி இடையே பாதை அமைக்கப்பட்டு, அதில் கடந்த ஆண்டு முழுமையான சேவை தொடங்கப்பட்டது. அதே போல் 24.20 கிலோ மீட்டர் நீளத்திற்கு வடக்கு-தெற்கு …

பெங்களூரு நகரின் முழுமையான மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் Read More »

Share
Scroll to Top