நீட் மருத்துவ தேர்வு

நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு அவசியம் என்ற விதியிலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழகத்தின் அவசர சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பின்னர் இது சம்பந்தமான பல வழக்குகளின் பின்னர், தமிழக மருத்துவக்  கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் …

நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு Read More »

Share

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது

மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு தொடர்பான பல வழக்குகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  85%  இட ஒதுக்கீடு குறித்தான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மொழி வினாக்களுக்கும் வேறுபாடு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் …

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது Read More »

Share

நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராஜ்நாத்சிங்கிடம் மனு

நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோரி டாக்டர். அன்புமணி ராமதாஸ் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மனு அளித்தார். பின்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு மசோதா 6 நாட்களில் சட்டமாக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு தொடர்பான மசோதா 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை மந்திரி கூறினார். இது தொடர்பாக பேச பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் நேரம் கோரி இருக்கிறேன். …

நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராஜ்நாத்சிங்கிடம் மனு Read More »

Share

மருத்துவப் படிப்பிற்கு 85 சதவீத இடஒதுக்கீடு ரத்து; மேல்முறையீடு செய்யப்படும் – அமைச்சர்

இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், இட ஒதுக்கீடை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதனன்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். மதுரையைச் சேர்ந்த மாணவர் சிபி உள்ளிட்ட மூவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.   அதில், “இந்தியா முழுவதும் நீட் தேர்வின் …

மருத்துவப் படிப்பிற்கு 85 சதவீத இடஒதுக்கீடு ரத்து; மேல்முறையீடு செய்யப்படும் – அமைச்சர் Read More »

Share

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் பின்னடைவை தவிர்க்க 85% இட ஒதுக்கீடு

செய்தி : நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் பின்னடைவை தவிர்க்க தமிழக அரசு தமிழக பாடத்திட்டப்படி படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு.

Share

நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு

நீட் தேர்வு முடிவுகளை இன்று சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மணவர்கள் ஒருவர்கூட இடம் பெறமுடியவில்லை. கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்களில் சேருவதற்கான நீட் (NEET) தேர்வு நடத்தப்பட்டது.  இத்தேர்வு, தமிழக மானில கல்வித்துறையின் பாடத்திட்டத்திற்கும், மத்திய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இருப்பதால், தமிழகத்தில் நடத்தப்பட மாட்டாது என்று மானில அரசு, உறுதியளித்திருந்த போதும், மத்திய அரசின் கோரிக்கையின் மீதான உச்சநீதிமன்ற …

நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு Read More »

Share

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வின் (NEET) முடிவுகளை ஜூன் 26 அல்லது அதற்கு முன்னர் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப் பட்ட இடைக்கால தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து அந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு அமைப்பான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகள் ஜூன் 26 அல்லது அதற்கு முன்பாக வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த மே 24-ஆம் தேதி சென்னை …

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம் Read More »

Share

“ஸ்டாப் இட்” : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்  கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் பல்வேறு மொழிகளில்  தேர்வு நடந்தது. சில மாணவர்களின் மனுக்களின் அடிப்படையில், நீதிபதி எம்.வி. முரளிதரன் இந்த இடைக்காலத் தடையை பிறப்பித்தார். மேலும் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) அதிகாரிகள் மற்றும் மத்திய மேல்நிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) இயக்குனர் ஆகியோர் …

“ஸ்டாப் இட்” : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை Read More »

Share

ஐகோர்ட் : நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை இல்லை

சென்னை ஐகோர்ட்டின் மதுரைக் கிளை, நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க இல்லை என தெரிவித்துள்ளது. கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு மாநில வாரியாக கேள்வித்தாளை வடிவமைக்காமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை பயன்படுத்த வேண்டும் மேலும் நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த …

ஐகோர்ட் : நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை இல்லை Read More »

Share

நீட் தேர்வில் முறைகேடுகள்: மருத்துவர்கள் சங்கம் தகவல்

நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ”இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் சென்ற ஞாயிறு அன்று நடத்தப்பட்டது. இந்தி, ஆங்கிலம், தமிழ், வங்கமொழி உள்ளிட்ட  10 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் 180 வினாக்கள் இடம் பெற்றன. நாடு முழுவதும் ஒரே தேர்வு. அத்தேர்வின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தரப்பட்டியல் தயாரிக்கப்படும். அவ்வாறு இருக்கும் பொழுது வெவ்வேறு மொழிகளில், …

நீட் தேர்வில் முறைகேடுகள்: மருத்துவர்கள் சங்கம் தகவல் Read More »

Share
Scroll to Top