தேர்தல் ஆணையம்

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு

இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. பாஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தற்போதைய கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு சட்டப்பேரவை செயலாளார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலக …

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு Read More »

Share

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகமானவையா? ஜூன் 3 முதல் கட்சிகள் நிரூபிக்கலாம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்யமுடியும், ஒரே கட்சிக்கு வாக்கு பதிவாகும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யமுடியும் என்றெல்லாம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டை  முன்வைத்திருந்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சவாலை ஜூன் 3-ம் தேதி முதல் எதிர்கொள்ள தயார் என தலைமைத் தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 12-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறும் அரசியல் கட்சிகள் அதை நிரூபிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் …

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகமானவையா? ஜூன் 3 முதல் கட்சிகள் நிரூபிக்கலாம் Read More »

Share

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம்

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூட்டியுள்ளது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்பட பல கட்சிகள் தேர்தல் தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடந்த முறைகேடுகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டின.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தாலும் பாஜவுக்கே வாக்குகள் விழும் வகையில் இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள் தொடர்பாக பல வழக்குகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.இந்நிலையில், தற்போது தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதை டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி செயல் விளக்கம் மூலம் 2 தினங்களுக்கு முன்பு நிருபித்துக் காண்பித்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தில் உள்ள நவீன மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அவ்வாறு முறைகேடு செய்ய இயலாது. பாதுகாப்பு நிறைந்தது என்று தேர்தல் ஆணையம் மறுத்தது.இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து விளக்கவும் அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று கூட்டியுள்ளது. இதில், வாக்காளர்களுக்கு பணம் தரும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது, அவர்களை கைது செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.* தேர்தல் ஆணையம் இன்று கூட்டியுள்ள கூட்டத்தில் முக்கியமாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.* தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது, வாரன்ட் இல்லாமல் அவர்களை கைது செய்வது, அதிகளவில் பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்தால் உடனடியாக தேர்தலை ரத்து செய்வது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு வசதியாக உரிய சட்டம் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.* ஒப்புகை சீட்டுடன் கூடிய நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது பற்றியும், தேர்தல் ஆணையத்திடம் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.* இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள 7 தேசிய கட்சிகள் மற்றும் 49 மாநில கட்சிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக இரண்டாக உடைந்து தேர்தல் ஆணையத்தில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் கலந்து கொள்ள உள்ளன.

Share
Scroll to Top