டில்லி

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு: அய்யாக்கண்ணு

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கைவிடாவிட்டால் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் …

எங்கள் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு எச். ராஜாதான் பொறுப்பு: அய்யாக்கண்ணு Read More »

Share

தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்துப் போராட்டம்

டெல்லியில் கடந்த ஏழு நாட்களாக போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள், இன்று பாதி மொட்டை அடித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் விவசாயிகள் தங்களை தாங்களே துடைப்பத்தால் …

தமிழக விவசாயிகள் பாதி மொட்டை அடித்துப் போராட்டம் Read More »

Share

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மத்திய அரசுக்கு முன்பே தெரியும் ?

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம், பணப் பரிமாற்றத்தின் மூலம் மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று தெரியவந்துள்ளது. அதிமுக (அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்று, ஜெயிலுக்குள் போய் 5 மாதம் முடிந்துள்ள நிலையில் அவர் லஞ்சம் கொடுத்து ஏராளமான சலுகைகளை அனுபவித்து வந்தது அம்பலமாகி உள்ளது. 5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் …

சிறையில் சலுகைகளுக்காக சசிகலா ரூ.2 கோடி லஞ்சம்: மத்திய அரசுக்கு முன்பே தெரியும் ? Read More »

Share

பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது

பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கு மேற்பட்ட தமிழக  விவசாயிகளை டெல்லி போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டம் மீண்டும் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து,  தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் தங்களது  நிலத்தில் பயிரிட முடியாமலும், பயிரிட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு  தள்ளப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் முதல் …

பிரதமர் மோடியின் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் கைது Read More »

Share

பிளாட்பாரத்தில் உறங்கிய 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

தலைநகர் டெல்லியில் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிய 8 வயது சிறுமி, துப்புரவு தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள கான்னாட் என்ற பகுதியில் வீடு இல்லாமல் அதிகம் பேர் பிளாட்பாரங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை அதே பகுதியில் துப்புரவு பணி செய்து வரும் நபர் ஒருவர் மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் …

பிளாட்பாரத்தில் உறங்கிய 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் Read More »

Share

ஜி.எஸ்.டி. அறிமுக விழா: மக்களவையில் இன்று ஒத்திகை

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்வதற்கான விழா, வரும், 30ம் தேதி இரவு நடக்க உள்ளது. இந்நிலையில், பார்லிமென்ட்டில், இன்று அதற்கான ஒத்திகை நடக்க உள்ளது. ஜூலை, 1 முதல் ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக, இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் விழா, பார்லிமென்ட் மைய மண்டபத்தில், வரும், 30ம் தேதி இரவு, 12:00 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, …

ஜி.எஸ்.டி. அறிமுக விழா: மக்களவையில் இன்று ஒத்திகை Read More »

Share

கெஜ்ரிவால் மீது லஞ்ச புகார் கூறிய மிஸ்ரா செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்தார்

டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது லஞ்ச புகார் கூறிய மிஸ்ரா செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்துள்ளர். பேட்டி அளித்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 5-வது நாளாக கபில் மிஸ்ரா உண்ணாவிரதம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Share

சட்டமன்றத்தில் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு குறித்து இன்று விளக்கம்!

2கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குச் சட்டமன்றத்தில் விளக்கமளிக்கப் போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சர் சத்தியேந்திர ஜெயினிடம் இருந்து இரண்டு கோடி ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக மற்றொரு அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றஞ்சாட்டினார். இதையடுத்துக் கபில் மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் நீக்கினார். 

இந்நிலையில் டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கபில் மிஸ்ராவைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டனர். 

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால் தன் மீதான குற்றச்சாட்டுப் பொய்யானது என்றும், உண்மையே இறுதியில் வெல்லும் என்றும் தெரிவித்தார். தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்குச் சட்டமன்றத்தில் பதிலளிக்கப் போவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்தார். 

Share

நிர்பயா பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனை உறுதி

புதுடெல்லி: நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். இரு நீதிபதிகளும் தனித்தனியே அளித்த தீர்ப்பில் 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாட்டின் மனசாட்சியை உலுக்கியது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லியில் 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு தனது ஆண் நன்பருடன் பேருந்தில் பயணம் செய்த நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். டெல்லி மருத்துவமனையிலும் தொடர்ந்து சிங்கப்பூர் மருத்துவமனையிலும் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் நிர்பயா உயிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் தாகுர், ராம்சிங் ஆகிய 5 பேருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் ஒருவன் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

டெல்லி மாநகராட்சிகள்- மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் வசம்

கடந்த 23-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு நடைபெற்ற டெல்லி மாநகராட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி மாநகராட்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் வசமுள்ளது. டெல்லியின் மூன்று மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் மற்றும் ஆம் …

டெல்லி மாநகராட்சிகள்- மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் வசம் Read More »

Share
Scroll to Top