குடியரசு தலைவர்

அப்துல் கலாமின் மணிமண்டபத்தை நரேந்திர மோடி திறந்துவைத்தார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடத்திலுள்ள பேக்கரும்பில் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். கலாம் நினைவிடத்திற்கு வந்திறங்கிய மோடியை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பிக்கள் சிலரும் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து, வளாகத்தில் கொடி ஏற்றிவைத்துவிட்டு மணி மண்டபத்தை திறந்து …

அப்துல் கலாமின் மணிமண்டபத்தை நரேந்திர மோடி திறந்துவைத்தார் Read More »

Share

நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு

சுப்ரீம் கோர்ட்டினால் 6 மாத தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டனையை அனுபவித்து வரும் நீதிபதி கர்ணன், தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு செய்துள்ளார். தமிழகத்தைச் சார்ந்தவரும், கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன் தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், தான் பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார். உச்சநீதிமன்ற ஆணையின்படி சென்ற ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த …

நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு Read More »

Share

இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்

இந்தியாவின் 13-வது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவுற்றதை அடுத்து,  இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக திரு. ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார். சரியாக நண்பகல் 12 மணி 7 நிமிடங்களுக்கு தேசிய கீதத்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நாட்டின் 14ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரும், பிரணாப் முகர்ஜியும் மேடையில் இருக்கை மாறி அமர்ந்தனர். பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி …

இந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார் Read More »

Share

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. 20 நிமிடம் உரையாற்றிய  பிரணாப் முகர்ஜி, தனது உரையில் , ”நாடாளுமன்றம் என்பது ஆக்கபூர்வமான விவாதங்களுக்கானது. அதற்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, இடையூறுகள் மூலம் சிதைக்கக் கூடாது. என்னுடைய வாழ்க்கையில் 37 ஆண்டுகளை நாடாளுமன்றத்திற்காக அர்பணித்துள்ளேன்.” என்றார். மேலும் அவர் கூறுகையில், “இந்திரா காந்தி …

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா Read More »

Share

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்கிறார். ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற மக்களவை செயலாளருமான அனூப் மிஷ்ரா நேற்று மாலை ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் தலைவர் ஆவார். இவர் 2-வது தலித் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகிறார். 1997 முதல் 2002-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்த கேரளாவைச் …

இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் 25-ந் தேதி பதவி ஏற்கிறார் Read More »

Share

இந்திய ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் முன்னிலை

இந்திய ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருகிறார். இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. இதில், மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, …

இந்திய ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் முன்னிலை Read More »

Share

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு

இந்திய ஜனாதிபதி தேர்தலுக்காக சென்னையில் இன்று காலை ஓட்டுப்பதிவு தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர்  தனபால், எதிர்க் கட்சி  தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டு சென்றனர். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் வாக்களிப்பதற்காக ஏற்கனவே தேர்தல் …

ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் 234 பேர் வாக்களிப்பு Read More »

Share

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு

இந்தியா முழுவதும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. பாஜ.க. கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். தற்போதைய கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு சட்டப்பேரவை செயலாளார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுவார். சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலக …

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது; ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற வாய்ப்பு Read More »

Share

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி இன்று (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தொடங்கி வைத்தனர். நம் நாட்டில் தற்போது இருக்கும் உற்பத்தி வரி, விற்பனை வரி என்ற பல்வேறு விதமான மறைமுக வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியான சரக்கு, சேவை வரி என்ற புதிய ஜி.எஸ்.டி. வரி  மத்திய அரசு முடிவு செய்தபடி, ஜூலை 1-ந் தேதி (இன்று) முதல் நாடு …

புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு: பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி தொடங்கி வைத்தனர் Read More »

Share

ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கவிருக்கிறது. பாரதீய ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உட்பட பிற எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு அதிமுக கோஷ்டி தலைவரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ. க.வின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். …

ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி முடிவுக்கு கட்டுப்பட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு Read More »

Share
Scroll to Top