கட்சிகள்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் அராஜகச் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  எனவே அனைவரும் ஒன்றிணைந்து  மோடி, அமித் ஷா ஆகியோர் கொடுக்கும் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று  ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கமான அணுகுமுறை மோடி, ஷா கூட்டணிக்கு எதிராக ஒருபோதும் செல்லுபடியாகாது  என்று ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி …

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள்: ஜெய்ராம் ரமேஷ் Read More »

Share

உதவி ஜனாதிபதி தேர்தல் : வெங்கையா நாயுடு வெற்றி

இந்தியாவின் தற்போதைய உதவி ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ந் தேதியுடன் முடிகிறது. புதிய உதவி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.  பாஜக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகளின் சார்பில், மகாத்மா காந்தியின் பேரரான, கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணப்பட்டபின் பாஜக வேட்பாளர் 68 வயதான முப்பவரப்பு வெங்கையா நாயுடு வெற்றி பெற்று இந்தியாவின் 12-வது உதவி ஜனாதிபதியாகும் தகுதி பெற்றுள்ளார்.   வெங்கையா நாயுடு, …

உதவி ஜனாதிபதி தேர்தல் : வெங்கையா நாயுடு வெற்றி Read More »

Share

ராகுல் காந்தி காரின் மீது தாக்குதல்: பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி கைது

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தையொட்டி, பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ஆவார். இதுகுறித்து குஜராத் போலிசார் கூறுகையில், “ராகுல் காந்தி கார் மீது கல் வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயேஷ் தார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர். முன்னதாக, இந்தச் சம்பவத்துக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுமே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருந்தார். எனினும், தன்னைத் தாக்கியவர்களைக் கண்டித்து …

ராகுல் காந்தி காரின் மீது தாக்குதல்: பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி கைது Read More »

Share

குஜராத்: ராகுல்காந்தி கார் மீது பா.ஜ.க.வினர் கல்வீசி தாக்குதல்

பா.ஜ.க. ஆளும் மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பயணம் செய்த கார் மீது பா.ஜ.க. -வினர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நடந்த இத்தாக்குதலினால்,  ராகுல் காந்தியின் கார் கண்ணாடிகள் உடைந்து கல் உள்ளே சென்றுள்ளது. அதிருஷ்டவசமாக ராகுல் காந்தி காயமின்றி தப்பினார்.  குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்ற பாஜகவின்  வெறுப்புணர்வால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும்,  உச்சபட்ச பாதுகாப்பில் …

குஜராத்: ராகுல்காந்தி கார் மீது பா.ஜ.க.வினர் கல்வீசி தாக்குதல் Read More »

Share

பாஜக பல மானிலங்களில் நடத்தும் குதிரை பேர அரசியலின் விளைவாக ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுகிறது

பீகார், குஜராத், தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மானிலங்களில் பா.ஜ.க.வினால் நிகழ்த்தப்படும் குதிரைபேர அரசியலின் விளைவாக, பா.ஜ.க.வுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ராஜ்யசபாவில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் பெரும்பான்மை பெற, 123 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தற்போது, 80 எம்.பி.,க்களின் ஆதரவு தான் உள்ளது. பீகாரில் சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வின் பின்புல வேலைகளால் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் …

பாஜக பல மானிலங்களில் நடத்தும் குதிரை பேர அரசியலின் விளைவாக ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெறுகிறது Read More »

Share

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரில் தஞ்சம், 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

குஜராத்தில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ததையடுத்து, மீதமுள்ளவர்களை பாதுகாக்க 44 எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு பெங்களூரில் தஞ்சம் அடைந்துள்ளனர். குஜராத்தில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி 3 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.  அங்கு பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். அதில் மூன்று பேர் பா.ஜ.க.வி. இணைந்துவிட்டனர். பணத்தையும், அதிகாரத்தையும் வைத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதாக …

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூரில் தஞ்சம், 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா Read More »

Share

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை உறுதிபடத் தெரியவில்லை: ஈராக் அமைச்சர்

ஈராக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை என்னவென்று உறுதிபடத் தெரியவில்லை என்றும் இன்னமும் அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்தியப் பாராளுமன்றத்தில்  அகாலிதளம் உள்ளிட்ட கட்சியினர் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தனர். தற்போது இந்தியா வந்துள்ள, ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் ஜபாரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடத்தப்பட்டவர்களின் …

ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் நிலைமை உறுதிபடத் தெரியவில்லை: ஈராக் அமைச்சர் Read More »

Share

மந்திரத்தை ஜபித்தால் சீனாவை வீழ்த்தலாம் : ஆர்.எஸ்.எஸ். யோசனை

சிக்கிம் எல்லையில் உள்ள டோகோலாம் பகுதியை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சியை,  ஒரு மந்திரத்தை நாள்தோறும் பூஜையின்போது ஜபிப்பதால் தடுக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். யோசனை கூறியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினரான, இந்தரேஷ் குமார்  பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ” ‘கைலாஷ், ஹிமாலயா, திபெத் ஆகிய பகுதிகளுக்கு, சீன ராட்சசனின் பிடியில் இருந்து விடுதலை வேண்டும்’ என, தினமும் காலையில் பூஜை செய்யும்போது, ஐந்து முறை கூற வேண்டும். ஹிந்துக்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும், இந்த மந்திரத்தை …

மந்திரத்தை ஜபித்தால் சீனாவை வீழ்த்தலாம் : ஆர்.எஸ்.எஸ். யோசனை Read More »

Share

மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும்: மம்தா பானர்ஜி

பல மாநிலங்களில் மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டு வரும் பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். இந்தியா விட்டு பா.ஜ.வை வெளியேற்றும் புதிய இயக்கத்தை ஆக.9 -ம் தேதி மாநிலம் முழுவதும் துவங்கப்போவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார். நேற்று, கோல்கட்டாவில் திரிணாமுல் காங். கட்சி சார்பில் தியாகிகள் தின பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது :   ராஜஸ்தானில் ஆயிரம் …

மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ள பாஜக அரசு 2019-ல் ஆட்சியை இழக்கும்: மம்தா பானர்ஜி Read More »

Share

குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கம்

குஜராத் முன்னாள் முதல்வர் ஷங்கர்சிங் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கப் பட்டார். குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக கடந்த 1996 – 1997-ம் ஆண்டில் பதவி வகித்தவர் ஷங்கர்சின்ஹ் வகேலா. பா.ஜ.க.வை சேர்ந்த இவர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எதிர்வரும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஷங்கர்சின்ஹ் வகேலா-வை முதல் மந்திரி வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என இவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தி இருந்தனர். ஆனால், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் …

குஜராத் முன்னாள் முதல்வர் வகேலா காங்கிரசில் இருந்து நீக்கம் Read More »

Share
Scroll to Top