பாகிஸ்தான் 2 ஆண்டுகளில் பல முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது
புதுடெல்லி: போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதை பாகிஸ்தான் தினசரி வாடிக்கையாக வைத்திருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் 405 முறையும், 2016-ம் ஆண்டில் 449 முறையும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் தரப்பில் இருந்து 1142 தீவிரவாத சம்பவங்கள் நடத்தப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் 236 பேரும், பொதுமக்கள் 90 பேரும் உயிரிழந்தன. இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 507 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அத்துமீறல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்படும் போது சமூக ஊடகங்களில் தகவல் பரவி பாதுகாப்பு படையினரை பொதுமக்கள் சூழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதனால் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.