உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது

மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு தொடர்பான பல வழக்குகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  85%  இட ஒதுக்கீடு குறித்தான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மொழி வினாக்களுக்கும் வேறுபாடு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் …

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது Read More »

Share

நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு

சுப்ரீம் கோர்ட்டினால் 6 மாத தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டனையை அனுபவித்து வரும் நீதிபதி கர்ணன், தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு செய்துள்ளார். தமிழகத்தைச் சார்ந்தவரும், கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன் தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், தான் பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார். உச்சநீதிமன்ற ஆணையின்படி சென்ற ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த …

நீதிபதி கர்ணன்: தண்டனையை ரத்து செய்ய, புதிய ஜனாதிபதியிடம் முறையீடு Read More »

Share

தனிநபரின் அந்தரங்கத்திற்கான உரிமை முழுமையானதாக இருக்க முடியாது, கட்டுப்படுத்தப்படலாம் : உச்ச நீதி மன்றம்

தனிநபரின் அந்தரங்கத்திற்கான உரிமை முழுமையானதாக இருக்க முடியாது, கட்டுப்படுத்தப்படலாம் என்று விசாரணையின் போது உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு  விசாரி த்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களிடம் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை எழுப்பியுள்ளது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்ரமணியன், சோலி …

தனிநபரின் அந்தரங்கத்திற்கான உரிமை முழுமையானதாக இருக்க முடியாது, கட்டுப்படுத்தப்படலாம் : உச்ச நீதி மன்றம் Read More »

Share

ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா ? இன்று ஆதார் வழக்கு விசாரணை

    ஆதார் அட்டை தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்கிறது.  குறிப்பாக, இந்தியாவில் ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா என்பதை நீதிபதிகள் தீர்மானிப்பர். அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு நியமம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஆதார் அட்டைக்காகச் சேகரிக்கப்படும் கைரேகைப் பதிவு, விழித்திரை ஸ்கேன் போன்றவை தனி நபரின் அந்தரங்கத்தில் அரசின் தலையீடாகும் என சுப்ரீம் கோர்ட்டில் …

ஒருவரின் அந்தரங்கம், அவரது அடிப்படை உரிமையா ? இன்று ஆதார் வழக்கு விசாரணை Read More »

Share

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைதானார்

உச்ச நீதிமன்றத்தால் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன், இன்று கோவையில் கொல்கத்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தமிழகத்தைச் சார்ந்தவரும், கொல்கொத்தா உயர்நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன் தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை துன்புறுத்துவதாகவும், தான் பழிவாங்கப்படுவதாகவும் கடந்த 2011-ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான ஆணையத்தில் புகார் அளித்தார். உச்சநீதிமன்ற ஆணையின்படி சென்ற ஆண்டு முதல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி …

முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைதானார் Read More »

Share

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி காலமானார்

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.  மும்பையில் பிறந்து வளர்ந்த பகவதி, வழக்கறிஞராக மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றியிருந்தார். 1973-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டின் 17-வது தலைமை நீதிபதியாக கடந்த 1985-86-ம் ஆண்டுகளிலும் திறம்பட பணியாற்றினார்.  வயது முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலகுறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில். நேற்று காலமானார். இவருக்கு மனைவியும், முன்று மகள்களும் உள்ளனர். பகவதி இறுதி சடங்கு …

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி காலமானார் Read More »

Share

நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்றார்

சர்ச்சைக்குரிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் நேற்றுடன் பதவி ஓய்வு பெற்றார். அவர் மீது சுமத்தப்பட்ட நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பு இன்னும் மேற்கு வங்கப் போலிசாரால் நிறைவேற்றப்படவில்லை. அவருக்கு எதிரான தீர்ப்பும் , அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், போலிசாரால் நிறைவேற்றப்படும்வரையோ அல்லது உச்சநீதிமன்றத்தால் திருத்தப்படும்வரையோ, தொடர்ந்து நிலுவையில் இருக்கும். இதற்கிடையே, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயிடம், தன் மீது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை இடை நிறுத்துமாறு …

நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்றார் Read More »

Share

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வின் (NEET) முடிவுகளை ஜூன் 26 அல்லது அதற்கு முன்னர் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் விதிக்கப் பட்ட இடைக்கால தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து அந்தத் தேர்வை நடத்தும் பொறுப்பு அமைப்பான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகள் ஜூன் 26 அல்லது அதற்கு முன்பாக வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த மே 24-ஆம் தேதி சென்னை …

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: உச்சநீதிமன்றம் Read More »

Share

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இடைக்கால தடை : சுப்ரீம் கோர்ட்

வருமானவரி தாக்கல் செய்ய பான் எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தற்போதைக்கு வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் அட்டை அவசியம் இல்லையென்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஜூலை முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. இதற்காக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. நிதி மசோதா திருத்தங்களின் படி வரி …

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இடைக்கால தடை : சுப்ரீம் கோர்ட் Read More »

Share

ஆதார் எண் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

வருமான வரிக் கணக்குகளை சமர்ப்பிக்கவும், பான் அட்டை கோருவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தீர்ப்பளிக்கிறது. வருமான வரிச் சட்டத்தில் 139ஏஏ என்ற பிரிவானது கடந்த மத்திய பட்ஜெட் மூலமும் 2017-நிதிச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கவும், நிரந்தரக் கணக்கு எண் (பான்) அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் எண் …

ஆதார் எண் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு Read More »

Share
Scroll to Top