இந்தியா

தண்டவாள பராமரிப்பு பணி காரணம் – உ.பி.-யில் ரயில் விபத்து: 23 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகியும்,  72 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். முதல்கட்ட விசாரணையில், விபத்திற்கான காரணம் தெரியவந்துள்லது. ரெயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெற்றதைக் குறித்து உத்கால் எக்ஸ்பிரஸ் டிரைவரிடம் தெரிவிக்கப்படாததால், இவ்விபத்து நேரிட்டது என  தெரியவந்து உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பூரி ஹரித்துவார் – கலிங்கா இடையே உத்கல் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மாலை 5.46 மணியளவில் முசாஃபர்நகர் அருகில் ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், …

தண்டவாள பராமரிப்பு பணி காரணம் – உ.பி.-யில் ரயில் விபத்து: 23 பேர் பலி Read More »

Share

லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கை கலப்பு குறித்து தெரியாது: சீனா

இந்திய சுதந்திர தினத்தன்று, லடாக் பாங்கோங் ஏரிப் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதால் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது. இது குறித்து சீன அரசுக்குத் புகார் அளிக்கப் பட்டபோது, தமக்கு எதுவும் தெரியாது என சீனா தெரிவித்துள்ளது. நேற்று காலை 6 மணிக்கு, மீண்டும் 9 மணிக்கு என இரண்டு தடவை சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் வர முயன்றனர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி …

லடாக் பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கை கலப்பு குறித்து தெரியாது: சீனா Read More »

Share

இந்தியாவின் 71-ம் சுதந்திர தினம்: பிரதமர் மோடி கொடியேற்றி உரை

இந்திய நாட்டின் 71-வது சுதந்திர தின விழா டெல்லியில் சிறப்பாக நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. “1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தியதி” என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், “நமது நாட்டின் உதய நாள்” என்றால் சொன்னால் அது மிகையாகாது. இதனை முன்னிட்டு, தலைநகர் புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது : “வரலாற்று சிறப்பு …

இந்தியாவின் 71-ம் சுதந்திர தினம்: பிரதமர் மோடி கொடியேற்றி உரை Read More »

Share

நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு அவசியம் என்ற விதியிலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழகத்தின் அவசர சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  பின்னர் இது சம்பந்தமான பல வழக்குகளின் பின்னர், தமிழக மருத்துவக்  கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு   நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் …

நீட் தேர்வு: ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்ட வரைவு மசோதா ஏற்பு Read More »

Share

உ.பி. மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி: யோகி அரசின் அலட்சியமே காரணம் ?

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இம்மருத்துவமனையில் பிராண வாயு விநியோகிக்கும் நிறுவனத்துக்கு ரூ.69 லட்சத்தை அரசு வழங்காமல் நிலுவை வைத்ததன் நிமித்தம், அந்நிறுவனம் ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 100வது வார்டில் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்கத்தால் துன்பப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த 100வது வார்டு ஆண்டுதோறும் குறிப்பாக மழை காலத்தில் …

உ.பி. மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலி: யோகி அரசின் அலட்சியமே காரணம் ? Read More »

Share

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது

மருத்துவ படிப்பிற்கான, நீட் தேர்வு தொடர்பான பல வழக்குகளில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில்,  85%  இட ஒதுக்கீடு குறித்தான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மொழி வினாக்களுக்கும் வேறுபாடு இருந்ததாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் …

நீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலம் சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது Read More »

Share

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் அகமது பட்டேல், அமித் ஷா, ஸ்மிருதி இரானி வெற்றி

குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு  தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த பல்வந்த்சிங் ராஜ்புத்  ஆகியோரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிட்டார். இருந்த 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், தேர்தலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸின் அகமது பட்டேல் வெற்றிக்கு தேவையான 44 வாக்குகளை …

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் அகமது பட்டேல், அமித் ஷா, ஸ்மிருதி இரானி வெற்றி Read More »

Share

பாஜக-வுக்கு தனி 500 ரூபாய் நோட்டா ? காங்கிரஸ் புகார்

இன்று ராஜ்யசபாவில் இரண்டு வெவ்வேறு விதமாக ரூபாய் நோட்டுக்கள் பிரிண்டிங் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சரத்யாதவ் இதுதொடர்பான ரூபாய் நோட்டுகளின் மாதிரிகளை காட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெரிக் ஒ’பிரையன் உள்பட சில உறுப்பினர்களும் 500 ரூபாய் நோட்டுகளை காட்டினர். காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் பேசியதாவது: மத்திய அரசு ஏன் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை எடுத்தது ஏன் என இப்போது தான் எங்களுக்கு தெரியவருகிறது. …

பாஜக-வுக்கு தனி 500 ரூபாய் நோட்டா ? காங்கிரஸ் புகார் Read More »

Share

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள்: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் அராஜகச் செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.  எனவே அனைவரும் ஒன்றிணைந்து  மோடி, அமித் ஷா ஆகியோர் கொடுக்கும் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று  ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கமான அணுகுமுறை மோடி, ஷா கூட்டணிக்கு எதிராக ஒருபோதும் செல்லுபடியாகாது  என்று ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி …

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்ட முயலும் மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள்: ஜெய்ராம் ரமேஷ் Read More »

Share

வெளிநாட்டில் இருந்து மகன் திரும்பியபோது எலும்புக்கூடாக தாய்

மும்பையின் அந்தேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 63 வயதான ஆஷா சஹானி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த கட்டிடத்திலுள்ள 10 – வது மாடியிலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களில் ஒன்றில் வசித்து வந்தார். அந்த தளத்திலுள்ள இரண்டு அபார்ட்மெண்ட்களும் சஹானி குடும்பத்தினருக்குச் சொந்தமானதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு அடிக்கடி செல்வதில்லை எனத் தெரிகிறது. ஆஷாவின் மகன் ரிதுராஜ் சஹானி, அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது தாயை பார்ப்பதற்காக நேற்று மும்பை வந்துள்ளார். வீட்டிற்கு வந்த …

வெளிநாட்டில் இருந்து மகன் திரும்பியபோது எலும்புக்கூடாக தாய் Read More »

Share
Scroll to Top