புற்றுநோயைக் குணமாக்க உதவும் தாவரங்கள் : 1
சில தாவரங்களில் இருந்து புற்று நோயைக் குணமாக்கும் மருந்துகள் எடுக்கப்படுகின்றன என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், ஒரு தாவரத்திலிருந்து மருந்து எடுக்கப்படும் செயல்முறையை உருவாக்கவும், பல நிலைகளில் சோதனை செய்து இறுதியில் அதனை மருந்தாக விற்கவும் எடுத்துக் கொள்ளப்படும் காலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும், என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புற்றுநோய் என்பது என்ன ? உடலிலுள்ள உயிரணுக்கள்ளான செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். …