ஆரோக்கியம்

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள் – டான்டேலியன்

பொதுவாக முற்றத்தில் வளரும் களைச் செடியான டான்டேலியன் அதன் மருத்துவ குணங்களால் பண்டைக்காலத்திலிருந்தே ஒரு மூலிகையாக கருதப்படுகிறது. ஹோமியோ மருத்துவத்தில் இது ஒரு சக்திவாய்ந்த டையூரிடிக் (Diuretic -சிறுநீர்ப் பெருக்கி)ஆக உபயோகப்படுத்தப் படுகிறது. கல்லீரல் மற்றும் பித்த கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களையும் சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த இயற்கை மூலிகையை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துமூலிகை தேநீராக குடிப்பதால் மலச்சிக்கலை குணமாக்க முடியும். டன்டேலியன் தேநீர், ஒரு லேசான மலமிளக்கியாகவும், நீர்ப்பிடிப்புக்கான ஒரு தீர்வாகவும் பயன்படுத்தப்படலாம். குடலின் இயக்கத்தை …

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள் – டான்டேலியன் Read More »

Share

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள்

மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சில தருணங்களில் ஏற்படும் உடல் கோளாறு மலச்சிக்கலாகும். மலச்சிக்கல் வருவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதனைக் குணப்படுத்தவும் பல வழிகள் கையாளப்படுகின்றன. சில மூலிகைகளிலிருந்து உருவாக்கப்படும் தேநீரைக் கொண்டும் மலச்சிக்கலைத் தீர்க்கலாம். அவைகளில் சிலவற்றைப் பார்க்கலாம். 1) சென்னா மூலிகைத் தேநீர் (Senna Tea) மலச்சிக்கலைத் தீர்க்கும் மிகச்சிறந்த,  சக்திவாய்ந்த மருந்து சென்னா தேநீராகும். இது இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகை தேநீராலான வலிமையான மூலிகை சிகிச்சை எனலாம். சென்னா தேநீர் மலச்சிக்கலில் இருந்து  உடனடி …

மலச்சிக்கலைத் தீர்க்கும் தேநீர் வகைகள் Read More »

Share

புற்றுநோயைக் குணமாக்க உதவும் தாவரங்கள் : 1

சில தாவரங்களில் இருந்து புற்று நோயைக் குணமாக்கும் மருந்துகள் எடுக்கப்படுகின்றன என்பது பலரும் அறிந்த விஷயம்தான். ஆனால், ஒரு தாவரத்திலிருந்து மருந்து எடுக்கப்படும் செயல்முறையை உருவாக்கவும், பல நிலைகளில் சோதனை செய்து இறுதியில் அதனை மருந்தாக விற்கவும் எடுத்துக் கொள்ளப்படும் காலம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும், என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புற்றுநோய் என்பது என்ன ? உடலிலுள்ள உயிரணுக்கள்ளான செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். …

புற்றுநோயைக் குணமாக்க உதவும் தாவரங்கள் : 1 Read More »

Share

காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு

காலையில் ஒரு கப் காபியுடன் உங்களது தினத்தைத் தொடங்குவது, உங்கள் வாழ்நாட்களை அதிகரிக்கச் செய்யும் என்று தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக (University of Southern California) ஆராய்ச்சியாளர்கள் தங்களது புதிய ஆய்வறிக்கையில் கூறுகிறார்கள். காபி குடிப்பதால் இதய நோய், புற்று நோய், பக்க வாதம், நீரிழிவு, சுவாசம் சம்பந்தமான நோய்கள், மற்றும் சிறுநீரக நோய்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக அவர்களது ஆய்வறிக்கை கூறுகிறது. தினமும் ஒரு கப் காபி குடிப்பவர்கள் இறக்கும் வாய்ப்பு, காபியே குடிக்காதவர்களைவிட 12 …

காபி குடிப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும்: புதிய ஆய்வு Read More »

Share

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் ஜிக்கா வைரஸ் பீதி எழுந்துள்ளது. கடந்த 2007 மற்றும் 2013ம் ஆண்டுகளில் பசிபிக் பிராந்திய நாடுகளான, அமெரிக்க, பிரேசில், கொலம்பியா, ஆப்ரிக்கா என ஜிகா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியது. ஆப்ரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதன் பாதிப்பு இருந்து வந்தது. 2007ம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 …

தமிழகத்தில் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு Read More »

Share

புஷ்வுட் பெரி புற்றுநோயைக் குணப்படுத்துமா ?

ஆஸ்திரேலியவில் காணப்படும் புஷ்வுட் பெரி என்ற பழத்திலிருந்து  எடுக்கப்பட்ட ஒரு இரசாயனம், புற்றுநோய் கட்டிகளை நீக்கும் தன்மை உடையதாக  காட்ட்ப்பட்டுள்ளது.  மேலும் இதனை விலங்குகள் மற்றும் மனிதர்களுடைய பயன்பாட்டிற்கு உபயோகிப்பதற்காக, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதைக்குறித்து சமூக வலைத் தளங்களில், புஷ்வுட் பெரியினால் புற்றுநோயை 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என்றவாறு தகவல்கள் பரப்பப் படுகின்றன. ஆனால் இத்தகவலில் பாதி உண்மை, பாதி பொய் கலந்திருப்பதாகவே தெரியவருகிறது. எது உண்மை ? ஆஸ்திரேலியாவின் ஒரு …

புஷ்வுட் பெரி புற்றுநோயைக் குணப்படுத்துமா ? Read More »

Share

இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் புதிய மருந்து

இறக்கும் நிலையில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை  உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது. இறக்கும் நிலையில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை தூக்கமின்மை மருந்து உதவுகிறது. சோல்பிடிம்( Zolpidem) என்ற  மருந்து பல்வேறு நிலைகளில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். மிச்சிகன் பல்கலைக் கழக வல்லுனர்கள் கோமா, பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் …

இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் புதிய மருந்து Read More »

Share

உடலுக்கு வலு, நோய் எதிர்ப்பாற்றல் அள்ளித்தரும் எண்ணெய், அடுப்பில்லா முளைகட்டிய பயறு

பயறு வகைகள் ‘லெக்யூம்’ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை. மற்ற தாவரங்களைவிட அதிகமான சத்துகள் நிறைந்தவை. குறைவான ஈரப்பதம் கொண்டவை. பல நாட்கள் பத்திரப்படுத்தி உண்ணும் உணவாக பயறு வகைகள் இருக்கின்றன. நன்கு முதிர்வடைந்த பயறுகளில் அதிகமான புரதச்சத்துகள் உள்ளன. முதிர்ந்த பயறுகளில் கிட்டத்தட்ட 20 – 30 சதவிகிதம் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. சாதாரண பயறுகளைவிட முளைகட்டிய பயறுகள் இரட்டிப்பு பலன்களைத் தருபவை. பயறுகளைச் சாதாரணமாக உட்கொள்ளும்போது உண்டாகும் வாய்வுத்தொல்லை முளைகட்டிய பயறை உண்ணும்போது உண்டாவதில்லை. மிக விரைவாக …

உடலுக்கு வலு, நோய் எதிர்ப்பாற்றல் அள்ளித்தரும் எண்ணெய், அடுப்பில்லா முளைகட்டிய பயறு Read More »

Share

புற்றுநோயை மரபணு மாற்றம் மூலம் சரி செய்யலாம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை ‘மரபணுவை மாற்றும் முறை’ மூலம் குணப்படுத்த முடியும் என்று ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் புற்றுநோய் போன்ற பல கொடூர நோய்களுக்கு எளிய முறையில் சிகிச்சையளிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. புற்றுநோய் உடையவர்களின் உடலில் நோய்கான உயிரணுக்களும், சாதாரண உயிரணுக்களும் தனித்தனியே வெவ்வேறு மரபணுக்களையே கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நோய்க்கு காரணமான பெரிய அளவிலான மரபணுவை மாற்றுவதன் வாயிலாகப் புற்றுநோயின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த …

புற்றுநோயை மரபணு மாற்றம் மூலம் சரி செய்யலாம் Read More »

Share

புதிய ஆய்வு: மதுபானம், ஷாம்பு, அழகு சாதன பொருட்கள் புற்றுநோயை விளைவிக்கும்

நமது உடலில் சிறிது அளவு மட்டுமே சுரக்கும் ஆல்டிஹைட் எனப்படும் ரசாயனம், இன்றைய சூழலில் நம்மைச் சுற்றியுள்ள, நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் அதிகமாகக் காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடலில் ஏற்படும் மரபணு சேதத்தைச் சரிசெய்யும் அணுக்களின் செயல்பாடானது பாதிக்கப்பட்டு, புற்றுநோயை விளைவிக்குமாம். நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களான மரசாமான்கள், அழகுசாதனங்கள், ஷாம்பு மற்றும் மதுபானங்களில் பொதுவாக காணப்படும் ரசாயனங்கள், இயற்கையாகவே நமது உடலில் சிறிது அளவு மட்டுமே இருக்க வேண்டிய ஆல்டிஹைடின் அளவை அதிகரிப்பதால் …

புதிய ஆய்வு: மதுபானம், ஷாம்பு, அழகு சாதன பொருட்கள் புற்றுநோயை விளைவிக்கும் Read More »

Share
Scroll to Top