அறிவியல்

உலகின் மிக உயரமான மரம்

உலகில் இருக்கும் மரங்களிலே மிகவும் உயரமான மரம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள “ஹைப்பீரியன்” (Hyperion) தான். 115.7 மீட்டர் (380 அடி) உயரமுடைய இந்த மரத்தின் வயது சுமார் 600 லிருந்து 800 வருடங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரம் கடற்கரை ரெட்வுட் (redwoods – Sequoia sempervirens) என்ற தாவர வகையைச் சார்ந்தது. காற்றினாலும் மரங்கொத்தி பறவைகளாலும் பாதிக்கப்பட்டாலும், இம்மரம் இன்னமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் துல்லியமான இருப்பிடம் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. கடற்கரை ரெட்வுட் …

உலகின் மிக உயரமான மரம் Read More »

Share

கண்ணாடி திடப்பொருளா திரவமா ?

நம் அன்றாட வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக  காணப்படக்கூடிய கண்ணாடி திடப்பொருளா அல்லது திரவப்பொருளா ? இப்படிக் கேட்டால் பொதுவாக சாதாரண மனிதர்கள் திடப்பொருள் என்றுதான் சொல்லுவர். ஆனால், சில தொல்லியல் ஆய்வாளர்கள் பழங்காலத்தைய சன்னல் கண்ணாடிகளை ஆய்வு செய்தபோது,  அவற்றின் கீழ்ப்பாகம் தடிமனாக இருப்பதைக் கண்டனர். இதனால், காலம் செல்லச் செல்ல, கண்ணாடி ஒருவேளை திரவமாக இருப்பதனால் புவி ஈர்ப்புவிசையால் வழிகிறதோ என சந்தேகப்பட்டனர்.  இருப்பினும் இது சரியான அனுமானம் இல்லை என்றும்,  புராதனமான சன்னல் கண்ணாடி …

கண்ணாடி திடப்பொருளா திரவமா ? Read More »

Share

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல

11 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ராஸ் 128 என்ற மங்கலான சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்திலிருந்து வந்ததாகக் கருதப்பட்ட “விநோத” சமிக்ஞை எதனால் என்று தீர விசாரித்த பிறகு, அது வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து வந்தது அல்ல என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த “விநோத” சமிக்ஞை நம்மால் அனுப்பப்பட்டு தொலைவில் சுற்றுக்கொண்டிருக்கும் துணைக்கோள்களின் சிக்னல் குறுக்கீடுகளால் உருவாகி இருக்கலாம் என்று வானியலாளர்கள் கருதுகின்றனர். வானியல் வல்லுனர்களைப் பொறுத்தவரை, இதன் உண்மையான மர்மம் என்னவென்றால், இந்த சமிக்ஞைகள்  அசாதாரணமான விண்மீன் நிகழ்வுகளாலா , பிற பின்னணி …

11 ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து வந்த சமிக்ஞை வேற்றுக்கிரக வாசிகளிடமிருந்து அல்ல Read More »

Share

கொசுக்களை அழிக்க கூகுளின் புதுத் திட்டம்

வெரிலி நிறுவனம் பாக்டீரியா தொற்றிய ஆண் கொசுக்களை கலிஃபோர்னியாவிலுள்ள ஃப்ரெஷ்னோவில் வெளியே அனுப்பியுள்ளது. இது மஞ்சள் காய்ச்சல் கொசுக்களை (Aedes aegypti) ஃப்ரெஷ்னோ விலிருந்து அழிப்பதற்கான முதல் முயற்சி. இக்கொசுக்களால் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிக்கா வைரஸ் ஆகியவை பரவுகிறது. கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபாபேட்ஸ் லைஃப் சயின்ஸ் (வெரிலி), தனது உயிர் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வகத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு மில்லியன் கொசுக்களை உருவாக்க உள்ளது. உலகில் உள்ள பல நோய்களுக்கு முக்கிய காரணம் கொசு. …

கொசுக்களை அழிக்க கூகுளின் புதுத் திட்டம் Read More »

Share

11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த விநோத சமிக்ஞை

சமீபத்தில் விண்வெளி ஆய்வாளர்கள் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்த ஒரு சிக்னலை ஆய்வு செய்து வருகின்றனர். ராஸ் 128 என்று அழைக்கப்படும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தில் இருந்து  இந்த சிக்னல் கிடைத்து உள்ளது . இது சூரியனை விட  2,800 மடங்கு  மங்கலானது ஆகும். அதை சுற்றி வேறு  எந்த  கிரகம் உள்ளது என  தெரியவில்லை. இந்த “விசித்திரமான” ரேடியோ சிக்னல்களை, மே மாதத்தில் புயூர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழகத்தில் வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அரிசிபோ நட்சத்திர …

11 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரத்தில் இருந்து வந்த விநோத சமிக்ஞை Read More »

Share

சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் பெரிய கருப்புப் புள்ளிகள்

நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம்  சூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட சூரியப்புள்ளியை கண்டறிந்து உள்ளது. அதற்கு ஏஆர் 2665 என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் பரப்பளவு பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்த பகுதி  சுழன்று வருவதுடன் விரைவாக வளர்ந்து வருகிறது  என நாசா ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது. சூரியனில் காணப்படும் கருப்புப்புள்ளிகள் பொதுவாக சூரியனின் மற்றபகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும். தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த பகுதியிலிருந்து  பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகள் எழலாம் என கருதப்படுகிறது. …

சூரியனின் மேற்பரப்பில் தோன்றும் பெரிய கருப்புப் புள்ளிகள் Read More »

Share

அண்டார்டிகாவில் டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை தனியாக பிளந்து மிதக்கிறது

அண்டார்டிகாவில் டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை தனியாக பிளந்து மிதக்கிறது. இதனால் கடல் மட்டம் சற்று உயரலாம் என்று கருதப்படுகிறது. இப்பனிப்பாறையை பலகாலமாக விஞ்ஞானிகள் ஐரோப்பிய செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணித்து வந்தனர். பின்னர், ஜூலை 10 ஆம் தேதிலியிருந்து 12 தேதிக்குள் பிரிந்து விட்டதை விஞ்ஞானிகள் அறிந்தனர். இப்பனிப்பாறையின் சுற்றளவு 5,800 சதுர கிலோமீட்டர்களாகும். இதற்கு ஏ 68 என்று பெயரிட்டுள்ளனர்.   இதுவரை பிரிந்து வந்த மிகப்பெரிய பனிப்பாறைகளில் மிகப் பெரியது   இதுவாகும். இதன் போக்கு …

அண்டார்டிகாவில் டிரில்லியன் டன் எடையுள்ள பனிப்பாறை தனியாக பிளந்து மிதக்கிறது Read More »

Share

புஷ்வுட் பெரி புற்றுநோயைக் குணப்படுத்துமா ?

ஆஸ்திரேலியவில் காணப்படும் புஷ்வுட் பெரி என்ற பழத்திலிருந்து  எடுக்கப்பட்ட ஒரு இரசாயனம், புற்றுநோய் கட்டிகளை நீக்கும் தன்மை உடையதாக  காட்ட்ப்பட்டுள்ளது.  மேலும் இதனை விலங்குகள் மற்றும் மனிதர்களுடைய பயன்பாட்டிற்கு உபயோகிப்பதற்காக, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதைக்குறித்து சமூக வலைத் தளங்களில், புஷ்வுட் பெரியினால் புற்றுநோயை 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என்றவாறு தகவல்கள் பரப்பப் படுகின்றன. ஆனால் இத்தகவலில் பாதி உண்மை, பாதி பொய் கலந்திருப்பதாகவே தெரியவருகிறது. எது உண்மை ? ஆஸ்திரேலியாவின் ஒரு …

புஷ்வுட் பெரி புற்றுநோயைக் குணப்படுத்துமா ? Read More »

Share

இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் புதிய மருந்து

இறக்கும் நிலையில் உள்ளவரை சுமார் 4 மணி நேரம் வரை  உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்கும் புதிய வகை மருந்து ஒன்று கண்டறியபட்டு உள்ளது. இறக்கும் நிலையில் இருக்கும் நோயாளிகளை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு வகை தூக்கமின்மை மருந்து உதவுகிறது. சோல்பிடிம்( Zolpidem) என்ற  மருந்து பல்வேறு நிலைகளில் வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். மிச்சிகன் பல்கலைக் கழக வல்லுனர்கள் கோமா, பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் அதிர்ச்சிகரமான மூளை காயங்கள் …

இறக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் புதிய மருந்து Read More »

Share

பூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானியல் ஆய்வாளர்

பூமியைச் சுற்றியுள்ள விண்கற்களில் ஒன்று வெகு விரைவில் பூமியில் மோதப்போவதாக அயர்லாந்திலுள்ள வானியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இப்பேரழிவு நடக்கலாம் என்றும் கூறியுள்ளார். அயர்லாந்தில் உள்ள ((Queen’s University Belfast)) குவீன்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர் ((Alan Fitzsimmons)) ஆலன் ஃபிட்சிம்மன்ஸ், 1908 ஆம் ஆண்டு சைபீரியாவில் விண்கல் விழுந்து 800 சதுர கிலோ மீட்டர் தொலைவிற்கு சேதம் விளைவித்ததைப் போல் இன்றைய உலகில் அப்படிப்பட்ட விண்கல் மோதல் நடைபெறும்போது பெரிய …

பூமியை விண்கல் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது : வானியல் ஆய்வாளர் Read More »

Share
Scroll to Top