வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக 11 நாட்கள் பதவி வகித்த அந்தோனி ஸ்காரமுக்கி பணிநீக்கம்
வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் நிகழும் உள்கட்சி மோதல்களைத் தவிர்த்து, ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்காக, புதிதாக அலுவலர்களின் மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜான் கெல்லி, கடந்த 11 நாட்களாக தகவல் தொடர்பு இயக்குநராக பதவி வகிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த அந்தோனி ஸ்காரமுக்கியை பணிநீக்கம் செய்துள்ளார். இது ஒழுங்கு முறையைக் கொண்டு வருவதற்கான அவரது முயற்சியின் முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் ஊடகவியல் செயலாளரான சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், கெல்லிதான் ஸ்காரமுக்கியை பணி நீக்கம் செய்யக் கோரினார் என்பதை …