அதிபர் டிரம்ப்

அமெரிக்காவின் பகுதியான குவாமை தாக்க வட கொரியா திட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வட கொரியாவிற்கு விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, மேற்கு பசிஃபிக் பெருங்கடலிலுள்ள அமெரிக்கப் பகுதியான குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வட கொரியா தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏவுகணைக்குள் பொருத்தக் கூடிய அளவில் அணுவாயுதம் ஒன்றை வெற்றிகரமாக வடகொரியா தயாரித்ததாக வெளியான தகவலை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு நெருப்புடன் கூடிய கோபத்துடன் பதில் கொடுக்கப்படும்; உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா …

அமெரிக்காவின் பகுதியான குவாமை தாக்க வட கொரியா திட்டம் Read More »

Share

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற ரஷ்யாவின் அதிபர் புடின் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது …

அமெரிக்காவின் 755 தூதரக அதிகாரிகளை ரஷ்யாவிலிருந்து வெளியேற்ற புடின் முடிவு Read More »

Share

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை பொருளாதார ரீதியாக  சீனாவும், ரஷ்யாவுமே ஊக்குவிக்கின்றன என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். நேற்று டில்லர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவில் இருந்து வளர்ந்துவரும் அணுசக்தி அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்தார். வெள்ளிக்கிழமை வடகொரியா  நடத்திய ஹுவாசாங்-14 ஏவுகணையை சோதித்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற பெரிய நகரங்களை தாக்க வல்லது என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க …

வடகொரிய ஏவுகணைச் சோதனைகளை ஊக்குவிப்பவர்கள் சீனாவும், ரஷ்யாவுமே : அமெரிக்கா Read More »

Share

வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலரான ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக ஜான் கெல்லி நியமனம்

வியாழனன்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,   வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலராக இருந்த ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக  உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ஜான் கெல்லியை நியமித்துள்ளார். ஓய்வு பெற்ற ஜெனரலும் அரசினால் கௌரவப்படுத்தப் பட்டவருமான ஜான் கெல்லி குடிவரவு  அமலாக்கத்தினை தனது நிர்வாகம்  நடைமுறைப்படுத்த வழிவகுத்தவர். இந்த அதிர்ச்சிகரமான மாற்றம் ப்ரீபஸுக்கும்  புதிய வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குனர் அந்தோனி ஸ்காரமுக்கிக்கும் இடையே, வெஸ்ட் விங்ஙில் இந்த வாரம் வெளிப்படையாக நிகழ்ந்த மோதல்கள் எல்லவற்றுக்கும் முத்தாய்ப்பாக நிகழ்ந்துள்ளது. அந்தோனி ஸ்காரமுக்கி …

வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலரான ரெயின்ஸ் ப்ரீபஸுக்கு பதிலாக ஜான் கெல்லி நியமனம் Read More »

Share

ரஷியா, ஈரான், வடகொரியா நாடுகளின் மீதான பொருளாதார தடை: அமெரிக்க செனட் சபை ஆதரவு

ரஷியா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளின் மீது  பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க செனட் சபை ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபை இச்சட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒப்புதல் தெரிவித்திருந்தது. அமெரிக்க நியமப்படி, பிரதி நிதிகள் சபையில் ஒப்புதல் பெற்றாலும் அதற்கு செனட் சபையிலும் அனுமதி பெற வேண்டும். ஆகவே செனட் சபைக்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த விவாதத்துக்கு பிறகு செனட் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 98 …

ரஷியா, ஈரான், வடகொரியா நாடுகளின் மீதான பொருளாதார தடை: அமெரிக்க செனட் சபை ஆதரவு Read More »

Share

அமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது

அமெரிக்க அதிபர் டிரம்பின் நிறைவேற்று அதிகாரத்தில் வெளியிடப்பட்ட பயணத்தடையில், உச்ச நீதிமன்றம் அனுமதித்த பகுதிகள் இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும், அகதிகளுக்கும் புதிய விசா வரையறை பின்பற்றப்படும். இந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும் இனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப அல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய வரையறை வலியுறுத்துகிறது. இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை …

அமெரிக்காவில் டிரம்பின் பயணத்தடை அமலுக்கு வருகிறது Read More »

Share

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி

இன்று (திங்கள்கிழமை) வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர்  மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கூடிய பேச்சுவார்த்தை மற்றும் பிரதிநிதித்துவ-நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தியபின், “பயங்கரவாதத்தை ஒழிப்பதே இரு நாடுகளுக்கும் அதி முக்கியமான முன்னுரிமையாகும்”, என்றார். பின்னர் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் பற்றி …

அதிபர் டிரம்புடன் சந்திப்பு; பயங்கரவாத ஒழிப்புக்கு அதிக முக்கியத்துவம் : மோடி Read More »

Share

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது

திங்களன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர்  டிரம்ப் அறிவித்த, ஆறு பெரும்பான்மை முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பயணத் தடை ஏற்படுத்தும் உத்தரவின் முக்கிய பாகங்களை மீண்டும் நிலைநிறுத்தி உள்ளது. இது குறித்தான முழு வாதங்களையும் இலையுதிர் காலத்திலிருந்து (அக்டோபர் மாதம்) கேட்கப்படும் என்றும் கூறியது. இது அதிபர் டிரம்பின் நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப் படுகிறது. முன்னதாக, டிரம்பின் இப்பயணத் தடை உத்தரவுகள் 9 வது சுற்று நீதிமன்றங்களினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தன. தீர்ப்பில், “ஒரு நற்பெயர் கொண்ட …

டிரம்பின் பயண தடை தொடர்பான நிறைவேற்று உத்தரவின் முக்கிய பாகங்களை சுப்ரீம் கோர்ட் அனுமதித்தது Read More »

Share

அமெரிக்காவில் மோடி : இன்று டிரம்புடன் பேச்சுவார்த்தை

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். நேற்று முன்தினம் போர்ச்சுக்கல் சென்றடைந்த மோடி, அந்நாட்டு பிரதமர் அன்டோனியோ காஸ்டாவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார். இதில் இரு நாடுகள் இடையே, வர்த்தகம், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. …

அமெரிக்காவில் மோடி : இன்று டிரம்புடன் பேச்சுவார்த்தை Read More »

Share

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர் ஓட்டோ மரணம் : வ.கொ. அரசுக்கு டிரம்ப் கண்டனம்

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் சென்ற வாரம் விடுவிக்கப்பட்ட 22 வயது மாணவர் ஓட்டோ வார்ம்பியர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியாவில் கொடுங்கோலாட்சி நடக்கிறது என்று கண்டனம் தெரிவித்தார்.  இன்று வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது : பல கெட்ட காரியங்கள் நடந்துள்ளன. ஆயினும் நாம் அவரை அவருடைய  பெற்றோருடன் சேர்த்துவைக்கும் அளவாவது முடிந்தது. அது ஒரு மிருகத்தனமான ஆட்சி. ஆயினும் நாம்மால் அதை கையாள …

வட கொரிய சிறையிலிருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட மாணவர் ஓட்டோ மரணம் : வ.கொ. அரசுக்கு டிரம்ப் கண்டனம் Read More »

Share
Scroll to Top