உலகின் மிக உயரமான மரம்


உலகில் இருக்கும் மரங்களிலே மிகவும் உயரமான மரம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள “ஹைப்பீரியன்” (Hyperion) தான். 115.7 மீட்டர் (380 அடி) உயரமுடைய இந்த மரத்தின் வயது சுமார் 600 லிருந்து 800 வருடங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரம் கடற்கரை ரெட்வுட் (redwoods – Sequoia sempervirens) என்ற தாவர வகையைச் சார்ந்தது. காற்றினாலும் மரங்கொத்தி பறவைகளாலும் பாதிக்கப்பட்டாலும், இம்மரம் இன்னமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் துல்லியமான இருப்பிடம் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரை ரெட்வுட் வகையைச் சார்ந்த வேறு சில மரங்களும் ஹைப்பீரியனுக்கு அடுத்த நிலைகளிலுள்ளன. ஹீலியோஸ் என்ற மரம் 114.1 மீட்டரும், இகாருஸ் மரம் 113.1 மீட்டருமாக வளர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top