சீனாவிலிருந்துதான் உலக சந்தைக்கு அதிக அளவில் செல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள், சாம்சங், பிளாக்பெரி போன்ற நிறுவனங்கள் வேறு நாடுகளில் இருந்து இயங்கினாலும் அவற்றின் புகழ்பெற்ற செல்போன்கள் உற்பத்தியாவது பெரும்பாலும் சீனாவிலிருந்துதான். ஆனால் தற்போது சீன கம்பெனிகள் தாமாகவே செல்போன்களை வடிவமைத்து விற்கின்றன. மேற்கத்திய நாடுகளில் வடிவமைக்கப்படும் செல்போன்களின் தரத்திற்கு இணையாகவும் சற்று விலை குறைவாகவும் இவை விற்கப்படுகின்றன.
தற்போது விற்பனையாகின்ற சீன செல்போன்களில் சிறப்பாக குறிப்பிடத்தக்க ஐந்தினைப் பற்றி இத்தொடரில் பார்க்கலாம்.
1) ஹுவாவெய் P20 pro (Huawei P20 Pro)
சிறப்புக்கூறுகள் (Features)
Display: 6.1-inch with 1080 x 2240 resolution
CPU: Kirin 970
RAM: 6GB
Storage: 128GB
Battery: 4,000mAh
OS: Android 8.1
Rear camera: 40MP + 20MP + 8MP
Front camera: 24MP
ஐ-போனைவிட சற்று விலை குறைவாக விற்கப்படுகிறது. இதன் கேமரா நல்ல தரம். ஆனால் 4K வீடியோ எடுக்கும்போது ஸ்டபிலைசேசன் (stabilization) சரியில்லை. பேட்டரி அதிக நேரம் தாங்கும். வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஹெட்போன் ஜாக் இல்லாதது குறைதான்.
அடுத்த பதிவில்: மி மிக்ஸ் 3