2017 சூரிய கிரகணத்தை அடுத்து ‘நிபிரு’ கிரகம் பூமியை அழிக்குமா? (சதித்திட்டக் கோட்பாட்டாளர்கள் அப்படி நினைக்கிறார்கள்)

உலகெங்கிலும் உள்ள சதி கோட்பாட்டாளர்களில் (Conspiracy Theorists) பலர், “நிபிரு” என்ற ஒரு கிரகம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூமியுடன் இடையில் மோதப்போவதாக கூறி வருகின்றனர். ஆகஸ்டு 21-ம் தேதி வரும் சூரிய கிரகணம், இந்த பேரழிவின் ஆரம்பத்தை அடையாளம் காணும் என்கின்றனர்.

‘பிளானட் எக்ஸ் – தி 2017 வருகை’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட்  மீட், 2017 செப்டம்பர் 23 அன்று  நிபிரு என்ற கிரகம் (பிளானெட் எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது) நமது பூமியை மோதி உடைக்கும் என்று கூறுகிறார்.

நிபிரு  என்று ஒரு கிரகம் இருப்பதை விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். என்றாலும், மீட் தன்னுடைய கூற்றுக்களை நிரூபிக்க பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்.

அக்டோபர் மாதத்தில் நிபிரு பூமியை அழிக்கும் என்று இந்த ஆண்டு துவக்கத்தில் மீட் வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் தற்போது அவர் செப்டம்பரிலேயே அது நிகழும் என்கிறார்.

கிரேட் அமெரிக்கன் கிரகணம் – முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 21 அன்று முழுமையான இருட்டில் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருக்கும். இச்சூரிய கிரகணம், நிபிரு கிரகத்தின்  வெளிப்படையான வருகையை குறிப்பதாக மீட் கூறுகிறார்.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top