சீனாவின் தென்மேற்கு – சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.0 ரிச்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தினால் இதுவரை வந்த தகவல்களின்படி 19 பேர் இறந்திருப்பதாகவும், 247 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சீனாவின் சிசுவான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0-ஆக பதிவாகியதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் சுமார் 106 அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், 1.3 லட்ச வீடுகள் சேதமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுகத்தில் பலியானவர்களில் சிலர் வெளிநாட்டு பயணிகளும் உள்ளனர். மேலும் 100 பயணிகள் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நில நடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் மின்சார கம்பங்கள் மற்றும் தண்ணீர் குழாய்கள் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சிசுவான் மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 8,0ஆக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 80 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.