டி மர எண்ணெய் (Tea Tree Oil)
ஆஸ்திரேலியாவில் வளரும் டி (Melaleuca alternifolia) மரத்தின் கிளைகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் எடுக்கப்படும் டி மர எண்ணெய், அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது ஒரு சக்தி வாய்ந்த ஆண்டிசெப்டிக் ஆகும். மேலும், காயங்களை சுத்தம் செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
டி மர எண்ணெயால் படர்தாமரை நோயையும் , சொறி, முகப்பரு, தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளையும் குணமாக்க முடியும்.
இதனை வாயில் விழுங்கினால் விஷமாகும். ஆகவே, வெளி உபயோகத்திற்கு மட்டும் இந்த எண்ணெய் பயன்படுகிறது.
சென் ஜான்ஸ் வர்ட் (St John’s wort)
சென் ஜான்ஸ் வர்ட் பொதுவாக ஐரோப்பாவின் காட்டுப்புற வெளிகளில் சாதாரணமாக வளரும் தாவரமாகும். இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் நரம்பு வலி ஆகியவற்றுக்கு நிவாரணியாகப் பயன்படுகிறது.
மேலும், இதிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்பு நிற எண்ணெய் புண்களைக் குணமாக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆன்டிபயோட்டிக் குணங்களும் இதில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
புற்று நோய் எதிர்ப்பு மருந்து, சைக்ளோபாஸ்பாமைடு உள்ளிட்ட பிற மருந்துகளின் செயல்பாட்டில் சென் ஜான்ஸ் வர்ட் குறுக்கிடும் வாய்ப்பு இருப்பதால், இதனை எடுத்துக்கொள்வதற்கு முன்பு, உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
ஒரு மாதத்திற்கும் மேலாக அதைப் பயன்படுத்தினால், விலகல் அறிகுறிகளை இந்த மூலிகை ஏற்படுத்தும். ஆகவே நோய் ஒரு மாதத்திற்கும் அதிகமாக தொடர்ந்தால், மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.