Day: August 6, 2017

நலம் தரும் மூலிகைகள் : 4 – டி மர எண்ணெய் & சென் ஜான்ஸ் வர்ட்

டி மர எண்ணெய் (Tea Tree Oil) ஆஸ்திரேலியாவில் வளரும் டி (Melaleuca alternifolia) மரத்தின் கிளைகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் எடுக்கப்படும் டி மர எண்ணெய், அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆண்டிசெப்டிக் ஆகும். மேலும், காயங்களை சுத்தம் செய்வதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்க்கும்  பண்புகளைக் கொண்டுள்ளது. டி மர எண்ணெயால் படர்தாமரை நோயையும் , சொறி, முகப்பரு, தோல் அழற்சி போன்ற தோல் வியாதிகளையும் குணமாக்க முடியும். …

நலம் தரும் மூலிகைகள் : 4 – டி மர எண்ணெய் & சென் ஜான்ஸ் வர்ட் Read More »

Share

பாகிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமனம்

பாகிஸ்தானின் புதிய பிரதமரான ஷாகித் ககான் அப்பாஸியின் 47 பேர் கொண்ட அமைச்சரவையில்  65 வயதான தர்ஷன் லால் என்பவர் அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.  இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் ஒரு இந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சிந்து மாகாணத்தில் மிர்புர் மாதெல்லோ எனும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  தர்ஷன் லால். இவர்  மருத்துவராக பணியாற்றியவர். 2013 ஆம் ஆண்டில் சிறுபான்மையிருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து பாகிஸ்தானின் தேசிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் நவாஸ் ஷெரீஃப் கட்சியான …

பாகிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமனம் Read More »

Share

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.-ஐ தாக்க முயற்சி

தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த ஒருவர் முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய 3 பேரும் இன்று 11 மணி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தனர்.  அவர்களை வரவேற்க 3 பேரின் ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை …

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பி.எஸ்.-ஐ தாக்க முயற்சி Read More »

Share

நாசா-வின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) சமீபத்தில் கோள் பாதுகாப்பு அதிகாரி (Planetary Protection Officer) என்ற வேலைக்கு ஆள் தேவை என விளம்பரம் செய்திருந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த  9 வயது சிறுவன் ஒருவன், தன்னை ஒரு விண்மீன் மண்டல பாதுகாவலர் (Guardian of the Galaxy) என்று கருதிக்கொண்டதால் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். மேலோட்டமாக இப்பதவியின் பெயர் “மென் இன் பிளாக்” (Men In Black) படத்தில் வரும் கதாநாயகர்களைப் போல பூமியை ஏலியன்களிடமிருந்து …

நாசா-வின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன் Read More »

Share

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் நிறைவேற்றம்

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டன. இத்தடைகள், வடகொரியா சமீபத்தில் மேற்கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைச் சோதனைகளின் நிமித்தம் அந்நாட்டின் மீது விதிக்கப்படுகின்றன. இத்தடைகள் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் மீது ஏழாவது முறையாக விதிக்கப்படுவன ஆகும். வட கொரியாவின் மீதான இத்தீர்மானம், 1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அதன் ஏற்றுமதி பொருள்களான நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, காரீயம், கடலுணவு பொன்றவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ளது. …

வட கொரியாவிற்கு எதிரான கடுமையான புதிய தடைகள் ஐ.நா. சபையில் நிறைவேற்றம் Read More »

Share
Scroll to Top