ராகுல் காந்தி காரின் மீது தாக்குதல்: பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி கைது

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தையொட்டி, பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ஆவார்.

இதுகுறித்து குஜராத் போலிசார் கூறுகையில், “ராகுல் காந்தி கார் மீது கல் வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயேஷ் தார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

முன்னதாக, இந்தச் சம்பவத்துக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுமே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியிருந்தார்.

எனினும், தன்னைத் தாக்கியவர்களைக் கண்டித்து போராட வேண்டாம் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் சண்டிகர், டெல்லி, மும்பை, குஜராத் உள்ளிட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரின் உணர்வை புரிந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். கற்கள் வீசி தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வலியுறுத்தியதை ஏற்பதாக கூறினார். ஆனால் கட்சியினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிய தங்கள் ஆற்றலை செலவிடுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மக்களாட்சி மீது மோடி அரசிற்கு நம்பிக்கை இல்லை என்றும், எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவை பாஜக விரும்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் கபில் சிபில் குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Share

1 thought on “ராகுல் காந்தி காரின் மீது தாக்குதல்: பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி கைது”

  1. Pingback: ராகுல் காந்தி காரின் மீது தாக்குதல்: பாஜகவைச் சேர்ந்த ஜெயேஷ் தார்ஜி கைது – thenthidal | தென் திடல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top