உதவி ஜனாதிபதி தேர்தல் : வெங்கையா நாயுடு வெற்றி

இந்தியாவின் தற்போதைய உதவி ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ந் தேதியுடன் முடிகிறது. புதிய உதவி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.  பாஜக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகளின் சார்பில், மகாத்மா காந்தியின் பேரரான, கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணப்பட்டபின் பாஜக வேட்பாளர் 68 வயதான முப்பவரப்பு வெங்கையா நாயுடு வெற்றி பெற்று இந்தியாவின் 12-வது உதவி ஜனாதிபதியாகும் தகுதி பெற்றுள்ளார்.

 

வெங்கையா நாயுடு, ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கையா, கடந்த 1949-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்தார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். ஜெய் ஆந்திரா இயக்கம் என்றதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

பாஜகவின் இளைஞரணி தலைவராக கடந்த 1977-இல் இருந்தார். இவர் முதல் முறையாக 1978-இல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாஜக கட்சியில் படிப்படியாக உயர்ந்து உதவி ஜனாதிபதி நிலையை எட்டியுள்ளார்.

முந்தைய 12 துணை ஜனாதிபதிகளும் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பிறந்தவர்களாகையால், வெங்கையா நாயுடு சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Share

1 thought on “உதவி ஜனாதிபதி தேர்தல் : வெங்கையா நாயுடு வெற்றி”

  1. Pingback: உதவி ஜனாதிபதி தேர்தல் : வெங்கையா நாயுடு வெற்றி – thenthidal | தென் திடல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top