பா.ஜ.க. ஆளும் மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி பயணம் செய்த கார் மீது பா.ஜ.க. -வினர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நடந்த இத்தாக்குதலினால், ராகுல் காந்தியின் கார் கண்ணாடிகள் உடைந்து கல் உள்ளே சென்றுள்ளது. அதிருஷ்டவசமாக ராகுல் காந்தி காயமின்றி தப்பினார். குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிடும் என்ற பாஜகவின் வெறுப்புணர்வால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், உச்சபட்ச பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தி மீதான இந்த தாக்குதல், குஜராத் மாநில அரசின் பாதுகாப்பு குளறுபடியை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளதுடன் தேசிய அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
Pingback: குஜராத்: ராகுல்காந்தி கார் மீது பா.ஜ.க.வினர் கல்வீசி தாக்குதல் – thenthidal | தென் திடல்